இந்த ஆண்டு 2024-ல் ஹோலி தினத்தில் முதல் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் 2 சந்திர கிரகணம், 2 சூரிய கிரகணங்கள் நிகழ உள்ளன. ஆண்டின் முதல் கிரகணம், சந்திர கிரகணம் மார்ச் 25-ம் தேதி நிகழ்கிறது.
அதே நேரம் இந்த நாள் இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஹோலி பண்டிகையும் அன்றைய தினம் வருகிறது.
பஞ்சாங்கத்தின்படி, பால்குன் மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் முழு நிலவு நாளில் கிரகணம் நிகழ்கிறது, இது சரியாக காலை 10:23 மணிக்கு தொடங்கி மதியம் 3:02 மணிக்கு முடிவடையும். எனினும் இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் காணப்படாது என்பது குறிப்பிடத்தக்கது, எனவே நல்ல காரியங்கள் செய்ய தடை இல்லை.
2024-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி திங்கட்கிழமை நிகழும். இது சுமார் 4 மணி நேரம் 40 நிமிடங்கள் நீடிக்கும், காலை 10:23 முதல் பிற்பகல் 3:02 மணி வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கு ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா மற்றும் சில பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகள் போன்ற உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் இந்த வானியல் நிகழ்வைக் காணலாம்.
இந்த சந்திர கிரகணத்தை அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கண்டு களிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“