ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்து வருகின்றன. வீடுகளுக்கே வந்து ஹோம் டெலிவரி செய்கின்றன. மக்கள் பலரும் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன. உணவு மட்டுமல்லாது காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளையும் சில நிறுவனங்கள் டெலிவரி செய்கின்றன.
இந்நிலையில், மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. அதாவது, பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்யும் வசதியை அமல்படுத்த, ஸ்விகி, சொமேட்டா, பிக் பேஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்.
ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்கத்தில் மதுபானங்களை ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ள நிலையில் கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அனுமதி பெற்று சேவையை வழங்க மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.
எனினும் இதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. வயது சரிபார்ப்பு மற்றும் பல விவரங்கள் சேகரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“