செல்ஃபி பிரியர்களை கவரும் வகையில் உருவாகும் ஹானரின் புதிய போன்...

பின்பக்க கேமராக்கள் 13 எம்.பி மற்றும் 2 எம்.பி செயல் திறன் கொண்டதாகும்.

Honor 10 Lite : ஹூவாய் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஹானர், தற்போது மிகச்சிறந்த கேமரா திறன் கொண்ட அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் ஹானர் வியூ20 என்ற போனை அறிமுகம் செய்து வைத்தது. 48எம்.பி. ரியர் கேமராவை கொண்ட போனா என்று ஆச்சரியத்துடன் அனைவரையும் வியக்கவைத்தது.

இரண்டு வாரங்கள் கூட முழுமை அடையாத நிலையில் தற்போது ஹானர் 10 லைட் என்ற போனை அறிமுகம் செய்ய உள்ளது ஹானர். 24 எம்.பி. ஏ.ஐ  திறன் கொண்ட செல்ஃபி கேமராவை ஹைலைட் செய்யும் விதமாக இந்த போன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

ஜனவரி 15ம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்த அறிமுக விழாவினைத் தொடர்ந்து இந்த டிவைஸ்ஸை ஃப்ளிப்கார்ட்டில் வாங்கிக் கொள்ளலாம்.

ப்ரீபுக்கிங் மற்றும் போனின் இதர சிறப்பம்சங்களை அறிந்து கொள்வதற்காக ஃபிளிப்கார்ட் தன்னுடைய இணைய தளத்தில் ஒரு பக்கத்தை ஒதுக்கியுள்ளது.

ஸ்கை ப்ளூ, வேலி வைய்ட், மற்றும் மேஜிக் நைட் பிளாக் என்ற மூன்று வித்தியாசமான நிறங்களில் வெளியாகிறது இந்த போன்.

கடந்த நவம்பர் மாதம் ஹானர் 10 லைட் சீனாவில் மூன்று ரேம் மற்றும் இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜூடன் வெளியானது இந்த போன்.

Honor 10 Lite சிறப்பம்சங்கள்

6.21 இன்ச் ஃபுல் டிஸ்பிளே

ரெசலியூசன் 2340×1080 pixels

ஹூவாய் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான ஹைசிலிக்கான் கிரின் 710 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது

ARM Mali-G51 MP4 கிராபிக்ஸ் ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது

ஆண்ட்ராய்ட் 9.0 பையை அடிப்படையாக கொண்டு செயல்படும் EMUI 9.0.1 ஸ்கின் இயங்குதளத்தில் இயங்குகிறது.

நான் ரிமுபவள் 3,400mAh சேமிப்புத் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

பின்பக்க கேமராக்கள் 13 எம்.பி மற்றும் 2 எம்.பி செயல் திறன் கொண்டதாகும்.

Honor 10 Lite விலை

4GB RAM/64GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜூடன் கூடிய போனின் விலை ரூ.14,000

6GB RAM/64GB ண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜூடன் கூடிய போனின் விலை ரூ. 17,400 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : ஹானர் வியூ20 போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close