ஒரே நாளில் வெளியான ஹானர் 20 சீரியஸின் 3 ஸ்மார்ட்போன்கள்! எப்போது விற்பனைக்கு வருகிறது?

ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வருகிறது என்ற அறிவிப்பு இன்று வெளியிடப்படவில்லை. 

Honor 20 pro, honor 20 , honor 20i smartphones specifications price
Honor 20 pro, honor 20 , honor 20i smartphones specifications price

Honor 20 pro, honor 20 , honor 20i smartphones specifications price :  கடந்த மாதம் லண்டனில் வெளியானது ஹானர் 20 சீரியஸில் உள்ள மூன்று ஸ்மார்ட்போன்கள். இந்தியாவில் இன்று ஹானர் 20 ப்ரோ, ஹானர் 20, ஹானர் 20i இந்த மூன்று போன்களுடன் ஹானர் பேட் 5 ஸ்மார்ட்போனும் வெளியாகியுள்ளது.

விற்பனை எப்போது ?

ஹானர் 20i ஜூன் 18ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஹானர் 20 ஸ்மார்ட்போன் ஜூன் 25ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.  ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வருகிறது என்ற அறிவிப்பு இன்று வெளியிடப்படவில்லை.

விலை

8GB/256GB சேமிப்புத்திறன் கொண்ட ஹானர் 20 ப்ரோ ( Honor 20 Pro ) போனின் விலை 39,999 ஆகும்.  6GB/128GB சேமிப்புத்திறன் கொண்ட ஹானர் 20 (Honor 20 ) ஸ்மார்ட்போனின் விலை ரூ. 32,999 ஆகும்.  ஹானர் 20i போனின் விலை ரூ. 14,999 ஆகும்.

மேலும் படிக்க : வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாட்டா ஸ்கை … இனிமேல் இந்த ப்ளான் இல்லை !

ஹானர் பேட் 5 விலை

ஹானர் பேட் 5 ரூ. 15,499க்கு விற்பனைக்கு வருகிறது. 8 இன்ச் அளவு கொண்ட மாடலின் விலை 15,499 (3ஜிபி/32ஜிபி), ரூ. 17,499 (4ஜிபி/64ஜிபி) ஆகும்.

10.1 இன்ச் அளவு கொண்ட 3ஜிபி/32ஜிபி மாடலின் விலை ரூ. 16,999 ஆகும். 4ஜிபி/64ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ. 18,999 ஆகும்.

இந்த டிவைஸ்களில் நீங்கள் ஜியோ பேக்கினை பயன்படுத்தும் போது கூடுதலாக கேஷ் பேக் வசதியை பெற்றிட இயலும்.

Honor 20 Pro சிறப்பம்சங்கள்

குவாட் கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மாட்போன் 6.26 இன்ச் அளவு கொண்டதாகும்.  வியூ 20 ஸ்மார்ட்போனில் இருப்பதைப் போன்றே ஹோல் பஞ்ச் டிசைனுடன் இது வெளியாகியுள்ளது. இதன் செல்ஃபி கேமரா செயல் திறன் 32எம்.பி. ஆகும்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Honor 20 pro honor 20 honor 20i smartphones specifications price

Next Story
வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாட்டா ஸ்கை … இனிமேல் இந்த ப்ளான் இல்லை !Tata Sky, Tata Sky Subscription
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com