Honor 7S : ஹுவாய் நிறுவனத்தின் ஹானர் 7S பட்ஜெட் ஸ்மார்ட் போனாகும். இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போன் இன்று மதியம் 12 மணியில் இருந்து ஃபிளிப்காட்டில் விற்பனைக்கு வருகிறது.
கண்ணைக் கவரும் மூன்று வித்தியசமான நிறங்களில் (நீலம், கருப்பு, மற்றும் தங்க நிறம்) வரும் இந்த போனின் விலை 6,999 மட்டுமே.
ஃப்ளிப்கார்ட் வழங்கும் சிறப்புச் சலுகைகள்
இன்று விற்பனைக்கு வர இருக்கும் இந்த போனை நோ காஸ்ட் ஈ.எம்.ஐயில் பெறலாம். ஆக்ஸிஸ் வங்கியின் கிரெட்டி கார்ட் மூலம் வாங்கினால் 5% காஷ் பேக் மற்றும் முதல் முறையாக ஜியோ பேக்கினை ஹானர் போனில் பயன்படுத்துபவர்களுக்கு 2200 வரையிலான காஷ்பேக் தர இருப்பதாக கூறியிருக்கிறது ஃப்ளிப்கார்ட் நிறுவனம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஜியோவின் 198 அல்லது 299 ரூபாய்க்கான ப்ரீபெய்ட் பிளானை பயன்படுத்தும் பட்சத்தில் இந்த காஷ் பேக்கினை பெற முடியும்.
ஹானர் 7S ( Honor 7S ) சிறப்பம்சங்கள்
5.45 இன்ச் எச்.டி மற்றும் டிஎஃப்டி திரையுடன் வருகிறது ஹானர் போன்.
1440 x 720 பிக்சல்கள் ரெசலியூசன் கொண்டிருக்கிறது இந்த போன். டிஸ்பிளே ஃபார்மெட் 18:9 ஆகும்.
மீடியாடெக் MT6739 ப்ரோசஸ்ஸருடன் வெளியாகும் இந்த போனின் இண்டெர்நெல் ஸ்டோரேஜ் 16 ஜிபி ஆகும். 2 ஜிபி RAM ஐக் கொண்டுள்ளது. 3GB RAM +32GB வேரியண்ட் வெளியாகவில்லை.
ஆண்ட்ராய்ட் ஓரியோவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் EMUI 8.0 இயங்கு தளத்தில் இயங்கி வருகிறது இந்த போன். இதன் பேட்டரி 3020mAh திறனைக் கொண்டிக்கிறது.
பின்பக்க கேமரா 13MP சென்சாரைக் கொண்டிருக்கிறது. செல்பி கேமரா 5MPயுடன் கூடிய f/2.2 சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கிறது.