ஹானர் 8C ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அக்டோபர் 16ம் தேதி விற்பனைக்கு வர உள்ளது இந்த போன்கள். இந்த போனின் மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் அம்சம் என்னவென்றால் அது நிறங்கள் தான். அரோரா ப்ளூ, மேஜிக் நைட் ப்ளாக், பிளாட்டினம் கோல்ட், நெபுலா பர்ப்புல் என கலர் வேரியண்டுகளுடன் வெளிவர இருக்கிறது இந்த போன். To read this aricle in English
ஹானர் 8C ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் என்னென்ன?
- 6.26 அங்குல் ஐபிஎஸ் எல்.சி.டி எச்.டி. திரையுடன் வெளிவருகிறது இந்த போன்.
- 19:9 என்ற பார்மெட்டுடன் வரும் இந்த போனின் ரெசலியூசன் 1520×720.
- இந்த போனின் டேட்டா சேமிப்புத் திறனை மெமரி கார்ட் மூலமாக 256 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளலாம்.
- ஆண்ட்ராய்ட் ஓரியோ 8.1 இயங்கு தளத்தில் இயங்குகிறது. 4000 mAh பேட்டரித் திறன் ஆகும்.
- க்வால்கோம் ஸ்நாப்ட்ராகன் 632 ப்ரோசஸ்ஸர் இந்த போனில் இணைக்கப்பட்டிருக்கிறது.
- பின்பக்க கேமராக்கள் 13MP மற்றும் 2MP திறன் கொண்டவரி. செல்பி கேமரா 8 எம்.பியாகும்.
- இந்த போனுடன் 3.5எம்.எம். ஆடியோ ஜாக் மற்றும் டேட்டா ட்ரான்ஸ்ஃபர் கேபிள் உடன் வருகிறது.
விலை
4GB RAM/32GB திறன் கொண்ட போனின் விலை 11,800 ஆகும். அதே போல் 4GB RAM/64GB திறன் கொண்ட போனின் விலை ரூபாய் 15,000 ஆகும்.