ஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா

Honor 8X Launch and Price in India : கறுப்பு, நீலம், மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன.

Honor 8X அறிமுகம் : இன்று காலை 11.30 மணி அளவில் டெல்லியில் தன்னுடைய புதிய போனை அறிமுகப்படுத்தியது ஹானர் நிறுவனம். இந்த ஹானரின் புதிய ஹானர் 8X 6.5 அங்குல அளவு கொண்டது.

திரை அமைப்பு

19.5 : 9 டிஸ்பிளே ஃபார்மெட்டுடன் கூடிய நோட்ச் ஸ்டைலில் வருகிறது இந்த போன். இந்த போனை அமேசான் இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். டபுள் டெக்ஸ்ச்சர்ட் வடிவமைப்புடன் வெளியான இந்த போனில் 15 லேயர்கள் அரோரா 2.5டி கர்வ்ட் கிளாஸ்ஸுடன் வடிவமைக்கப்பட்டிக்கிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Honor 8X Specification, Feature, Camera and Price in India

Honor 8X சிறப்பம்சங்கள்

ஹூவாய் நிறுவனத்தின் ஹைசிலிக்கான் கிரின் 710 ப்ராசசர் மூலம் செயலப்ட்டு வருகிறது. இதன் RAM திறன் 4ஜிபி ஆகும். செல்போனின் பின்பக்கத்தில் இரட்டைக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அதில் ஒரு கேமராவின் திறன் 20 எம்.பி ஆகும். மற்றொன்றின் திறன் 2 எம்.பி. ஆகும். செல்பி கேமராவின் திறன் 16 எம்.பி. ஆகும். இந்த போனின் இயங்குதளம் ஆண்ட்ராய்ட் ஓரியோ ஆகும். பேட்டரித் திறன் 3,750mAh ஆகும். கறுப்பு, நீலம், மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன.

Honor 8X விலை

  • 4GB RAM/64GB திறன் கொண்ட போனின் விலை ரூபாய் 14,999 ஆகும்.
  • 6GB RAM/64GB திறன் கொண்ட போனின் விலை ரூபாய் 16,999 ஆகும்.
  • 6GB RAM/128GB திறன் கொண்ட போனின் விலை ரூபாய் 18,999 ஆகும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close