ஹானர் 9N ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது!

என்னென்ன சிறப்பம்சங்களுடன் வருகிறது ஹானர் 9N?

Honor 9N Launch, Honor 9N Launch in India,
Honor 9N Launch

Honor 9N Launch: 

சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் அலைபேசி மாடலான ஹானர் இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. 5.84 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்பிளேயுடன் கூடிய 19:9 ஸ்கீரின் ஃபார்மட்டுடன் வருகிறது.

க்ளாஸினால் செய்யப்பட்ட இந்த போனை ஃப்ளிப்கார்ட்டில் (Flipkart) வாங்கிக் கொள்ளலாம். இரண்டு பின்பக்க கேமராக்களுடன் கூடிய இந்த போனின் ஆரம்ப விலை 11,999 ஆகும்.

நீலம், கறுப்பு ஆகிய நிறங்களில் வரும் இந்த போன், மிக விரைவில் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறங்களிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

ஹானர் 9N மூன்று வித்தியாசமான வேரியண்ட்களில் இந்தியாவில் கிடைக்கும். 3GB RAM மற்றும் 32GB இண்டெர்னல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய போனின் விலை ரூபாய். 11,999. 4GB RAM மற்றும் 64GB இண்டெர்னல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய போனின் விலை ரூபாய் 13,999. 4GB RAM மற்றும் 128GB இண்டெர்னல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய ஃபோனின் விலை ரூபாய் 17,999 ஆகும்.

ஹானர் 9N சிறப்பம்சங்கள் அனைத்தும் ஹானர் 9 லைட்டின் சிறப்பம்சங்களை ஒத்திருக்கிறது. க்ரின் 659 என்ற புரோசஸ்ஸர் மூலமாக இயங்குகிறது. இந்த போனின் பேட்டரி பேக்கப் என்பது 3000mAh ஆகும்.

ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ இயங்கு தளத்தில் இயங்குகிறது இந்த ஹானர். 16MP முன்பக்க கேமராவினையும், 13MP+2MP பின்பக்க கேமராவினையும் கொண்டுள்ளது.

சிறப்புச் சலுகைகள்

ஜியோவுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஹானர் ரூ.2200 க்கு கேஷ் பேக் ஆஃபரையும், 100ஜிபி டேட்டாவினையும் தர இருக்கிறது. மிந்த்ராவின் 1200 ரூபாய்க்கான வவுச்சர் ஒன்றினையும் தருகிறது ஜியோ.

இந்த செய்தியினை ஆங்கிலேயத்தில் படிக்க

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Honor 9n launch comes with notched display dual rear cameras price specificat

Next Story
தேவையில்லாத அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவதை தடுக்க உதவும் iOS 12 இயங்குதளம்TRAI
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com