ஹானர் மேஜிக் 6 ப்ரோ நிறுவனத்தின் சமீபத்திய ப்ளாக்ஷிப் ஸ்மார்ட் போன் ஆகும். ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனில் புதுமையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஏ.ஐ-ல் இயங்கும் 'ஐ ட்ராக்கிங்' மற்றும் 'மேஜிக் கேப்சூல்' போன்ற புதுமையான அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
Advertisment
ஐ ட்ராக்கிங் தனித்துவமான தொழில்நுட்பத்தை வழங்குகிறது, இது மேஜிக் கேப்சூலில் இருந்து நோட்டிவிக்கேஷனை வழங்குகிறது. மேஜிக் 6 ப்ரோ தவிர, நிறுவனம் போர்ஸ் டிசைன் மேஜிக் வி2 ஆர்.எஸ்.ஆர் என்ற பிரீமியம் போல்டபுள் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியது, இது மேஜிக் வி2-ன் பிரீமியம் வெர்ஷனாகும்.
ஹானர் மேஜிக் 6 ப்ரோ கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் போன், 2K தெளிவுத்திறனுடன் 6.8-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. மேலே டைனமிக்-ஐலண்ட் போன்ற "மேஜிக் கேப்சூல்" உள்ளது, இதில் செல்ஃபி கேமரா மற்றும் கண்களைக் கண்காணிப்பதற்கான கூடுதல் சென்சார்கள் உள்ளன.
ஸ்மார்ட் போன் 12 GB LPDDR5x ரேம் மற்றும் 512 GB UFS 4.0 ஸ்டோரேஜை வழங்குகிறது. கேமராவை பொறுத்தவரை 50 எம்.பி வைட்-ஆங்கிள் லென்ஸ், 50 எம்.பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் 2.5x ஆப்டிகல் ஜூம் மற்றும் அதற்கு மேல் ஆதரவுடன் 180 எம்.பி டெலிஃபோட்டோ ஜூம் லென்ஸைக் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும். முன்பக்கத்தில் 100x டிஜிட்டல் ஜூம் லென்ஸ் உள்ளது.
ஃபேஸ் அன்லாக் செய்ய உதவும் 3D டெப்த் கேமராவுடன் 50 எம்.பி செல்ஃபி கேமராவும் உள்ளது, மேலும் இந்த போனில் உள்ள அனைத்து கேமராக்களும் 4கே ரெசல்யூஷன் வரை வீடியோக்களை பதிவு செய்ய முடியும். Water and dust resistance மதிப்பு IP68 என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது 80W வயர்டு மற்றும் 66W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,600 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Android 14 அடிப்படையிலான MagicUI 8.0-ல் இயங்குகிறது.
ஐரோப்பாவில், ஹானர் மேஜிக் 6 ப்ரோவின் விலை 1299 யூரோ அதாவது ரூ.1,16,000 விலையாகும். 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போன் இந்த விலையாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“