/tamil-ie/media/media_files/uploads/2018/07/Honor.jpg)
ஹானர் நோட் 10 ( Honor Note 10 ) திறன்பேசி வருகின்ற செவ்வாயன்று (31/07/2018) சீனாவில் இருக்கும் பெய்ஜிங்கில் வெளியாகிறது. இது தொடர்பாக டீசர் ஒன்றை வெளியிட்டு அசத்தியிருக்கிறது ஹானர் நிறுவனம்.
Weibo இணையத்தில் வெளியான இந்த டீசரில் ஏதோ ஒரு மர்மத்தினை தனது வாடிக்கையாளர்களுக்கு உணர்த்துவது வெளிப்படையாக தெரிகிறது. இந்த திறன்பேசியின் பேட்டரி திறன் மிகவும் அசாத்தியமானது. 5000mAh பேட்டரியுடன் வரும் இந்த போனில் கூல் டெக்னாலஜி என்ற புதிய அம்சத்தினை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஹானர் நோட் 10 என்பது மிகப் பெரிய திரையுடன் கூடிய திறன்பேசியாகும். இந்த ஹானர் நோட் சீரியஸ்ஸின் 9வது திறன்பேசியை வெளியிடாமல் 10வது திறன்பேசியை வெளியிடுகிறது ஹானர் நிறுவனம்.
இந்த வரிசையில் கடைசியாக வந்த போன் ஹானர் நோட் 8 ஆகும். இது 2016ல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
Honor Note 10 சிறப்பம்சங்கள்
அளவு : 6.9 அங்குலம்
ரெசலியூசன் : 1440p (2k display)
ப்ரோசஸ்ஸர் : கிரின் 970
இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டுகளுடன் இந்த போன்கள் வெளிவருகிறது. 6ஜிபி RAM / 124GB இண்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி RAM / 256GB இண்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும்.
இயங்குதளம் : ஆண்ட்ராய்ட் ஓரியோ 8.1
இந்தியாவில் எப்போது வெளிவரும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.