/indian-express-tamil/media/media_files/2025/09/08/honor-pad-x9a-2025-09-08-15-41-22.jpg)
சிங்கிள் சார்ஜ் 70 நாட்கள் நீடிக்கும் பேட்டரி... 8,300mAh பேட்டரியுடன் ஹானர் பேட் எக்ஸ்9ஏ அறிமுகம்!
ஹானர் நிறுவனம் தனது புதிய Pad X9a டேப்லெட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. பெரிய திரை, சக்திவாய்ந்த செயலி, நீண்ட பேட்டரி மற்றும் மேம்பட்ட ஆடியோ அமைப்புடன் வந்துள்ள இந்த டேப்லெட், படிப்பு, வேலை மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு சிறந்த தேர்வாகிறது.
அசர வைக்கும் டிஸ்பிளே & வடிவமைப்பு
ஹானர் பேட் X9ஏ, 11.5 இன்ச் 2.5K LCD திரையைக் கொண்டுள்ளது. இதன் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் TÜV Rheinland சான்றிதழ் பெற்ற நீல ஒளி குறைப்பு தொழில்நுட்பம், நீண்ட நேரம் பயன்படுத்தும்போதும் கண்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்கிறது. வீடியோக்கள் பார்ப்பதற்கும் வேலைகளுக்கும் ஏற்ற 16:10 aspect ratio வடிவமைப்புடன், Narrow bezels ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்துகின்றன.
வேகமான செயல்திறன்
இந்த டேப்லெட், Snapdragon 685 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 8GB ரேம்+128GB சேமிப்புத் திறன் வழங்கப்பட்டுள்ளது. ஹானரின் புதிய MagicOS 9.0 (Android 15) ஓ.எஸ்., மென்மையான மற்றும் வேகமான செயல்பாடுகளை உறுதி செய்கிறது. மேம்படுத்தப்பட்ட 6-வேக கூல்-சிஸ்டம் அதிக வெப்பத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
கேமரா & ஆடியோ அனுபவம்
கேமரா பிரிவில், பின்புறம் 8MP கேமராவும், முன்புறம் 5MP கேமராவும் உள்ளன. இவை வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபிக்களுக்கு ஏற்றவை. இதில் உள்ள ஏ.ஐ. கேமரா மேம்படுத்தல்கள், புகைப்படங்களையும் வீடியோக்களையும் அதிகத் துல்லியமாக எடுக்க உதவுகின்றன. ஆடியோ அனுபவத்தை பொறுத்தவரை, 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய Honor Histen Audio தொழில்நுட்பம், மேம்பட்ட மற்றும் துல்லியமான ஒலியை வழங்குகிறது.
நீண்ட நேர பேட்டரி & கூடுதல் அம்சங்கள்
8,300mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 35W வேக சார்ஜிங்கை ஆதரிப்பதால், விரைவாக சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 நாட்கள் வரை standby முறையில் நீடிக்கும். இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு கொண்டது.
Wi-Fi, Bluetooth 5.1 மற்றும் USB Type-C போன்ற இணைப்பு வகைகள் இதில் உள்ளன. சுமார் 475 கிராம் எடையுடன், இது எளிதாக எடுத்துச் செல்லும் வசதியை வழங்குகிறது. ஒரே நேரத்தில் பல செயலிகளை எளிதாக இயக்க முடியும். ஹானர் வயர்லெஸ் கீபோர்டு மற்றும் ஸ்டைலஸ் ஆதரவுடன், இது அதிக உற்பத்தித் திறனை வழங்குகிறது.
யாருக்கு இந்த டேப்லெட் சிறந்த தேர்வு?
ஹானர் பேட் X9ஏ, மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஊடக பிரியர்கள் மற்றும் கிரியேட்டிவ் கலைஞர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்புகள் எடுப்பது, ஆவணங்களைத் திருத்துவது, வீடியோ அழைப்புகளில் பங்கேற்பது, திரைப்படம் பார்ப்பது (அ) டிசைனிங் செய்வது என அனைத்துப் பயன்பாடுகளுக்கும் இது சிறந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.