ஸ்மார்ட்போனில் 48 எம்.பி கேமராவா ? அசர வைக்கும் ஹானரின் வியூ20

ஹானர் வியூ20 6ஜிபி/128ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 2,999 யுவான் (ரூ. 30,000)

Honor View20 with 48MP Camera Launch : ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் இன்று தன்னுடைய புதிய போனான ஹானர் வியூ20 – ஐ சீனாவில் வெளியிட்டுள்ளது. பாரிஸில் வருகின்ற ஜனவரி 22ம் தேதி இந்த போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்போதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டுமென்றால், வாடிக்கையாளர்கள் கவனிப்பது ரேம் செயல்திறன், இண்டெர்நெல் ஸ்டோரேஜ், முகப்பு கேமரா மற்றும் செல்ஃபி கேமராவின் செயல் திறன் இந்த நான்கினை மட்டும் தான்.

Honor View20 with 48MP Camera Launch

பெரிய பெரிய புகைப்பட கருவிகள் தயாரித்து வழங்கும் கேனான், நிக்கான், சோனி போன்ற நிறுவனங்கள் கூட 48 எம்.பி கொண்ட கேமராக்களை இது நாள் வரையில் வெளியிட்டதில்லை, முதல்முறையாக ஹானர் வியூ20- யில் 48எம்.பி செயல் திறன் கொண்ட கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க : சியோமியின் போக்கோ போன் F1 ஆர்மர்ட் போனின் விலை என்ன ?

Honor View20 சிறப்பம்சங்கள்

இந்த போனின் இன்-டிஸ்பிளே சர்குளர் ஹோலில் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

ஹூவாய் மேட் 20 ப்ரோ போனில் இருப்பதைப் போலவே மூன்று கேமராக்களை கொண்டிருக்கிறது இந்த போன். சோனியின் IMX586 சென்சாரைக் கொண்டுள்ள 48 எம்.பி கேமரா, டைம் ஆஃப் ப்ளைட் கேமராவும் இதில் அடங்கும்.

திரை 6.4 இன்ச் ஃபுல் வியூ டிஸ்பிளே

போனின் பின்பக்கம் V பேட்டர்னில் அமைக்கப்பட்டிருக்கிறது

ஹூவாய் நிறுவனத்தின் கிரின் 980 ஆக்டா கோர் ப்ராசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

9 லிக்விட் கூல் டெக்னாலஜியின் வந்துள்ள இந்த போனில் GPU Turbo 2.0 இணைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி திறன் 4000mAh கொண்டதாகும்

Honor View20 விலை

ஹானர் வியூ20 6ஜிபி/128ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 2,999 யுவான் (ரூ. 30,000)

8ஜிபி/128ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 3,499 யுவான் (ரூ. 35,000)

8ஜிபி/256ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 3,999 யுவான் (ரூ.40,500)

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close