/indian-express-tamil/media/media_files/2025/08/18/honor-x7c-5g-2025-08-18-19-54-34.jpg)
சிங்கிள் சார்ஜ் 46hrs நீடிக்கும் பேட்டரி, 16ஜிபி ரேம், 50mp கேமரா... இந்தியாவில் அறிமுகமானது ஹானர் X7c
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹானர், தனது புதிய ஸ்மார்ட்போனான ஹானர் எக்ஸ் 7 சி (Honor X7c)-யை ஆகஸ்ட் 18 இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனின் விற்பனை ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் பிரத்தியேகக் கிளைகளிலும், முன்னணி இணைய வர்த்தக தளங்களிலும் வாங்கலாம்.
ஹானர் X7c ஸ்மார்ட்போன் அலுமினியம் சிலிக்கேட் உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில், உறுதியான மற்றும் மேம்பட்ட தரத்தைக் கொண்டுள்ளது. தூசி, நீர் புகாத தன்மைக்கு IP64 சான்றிதழுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பச்சை, வெள்ளை ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த போனில், 5200mAh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 35W வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 59 மணிநேரம் தொடர்ந்து பாடல்கள் கேட்கலாம் அல்லது 46 மணிநேரம் தொடர்ந்து அழைப்புகளைப் பேசலாம் என ஹானர் நிறுவனம் உறுதியளிக்கிறது. மேலும், அல்ட்ரா பவர் சேவிங் அம்சம் மூலம், வெறும் 2% சார்ஜ் இருக்கும்போதும் 75 நிமிடங்கள் வரை பேச முடியும்.
ஹானர் எக்ஸ் 7 சி, ஸ்னாப்டிராகன் 4 Gen 2 புராசஸர் மூலம் இயங்குகிறது. இது சிறந்த செயல்திறனை வழங்குகிறது. இதன் இயங்குதளம் மேஜிக் ஓஎஸ் 8.0 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி உள் நினைவகத்துடன் வருகிறது. கூடுதலாக, 8ஜிபி virtual RAM வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த ரேம் திறன் 16ஜிபி ஆக அதிகரிக்கிறது. இது பல்வேறு செயலிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதற்கு உதவுகிறது. இதன் சேமிப்புத் திறன் 256ஜிபி ஆகும்.
புகைப்பட ஆர்வலர்களுக்காக, பின்புறத்தில் 2 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. 50MP முதன்மைகேமரா, 2MP டெப்த் கேமரா. இந்த கேமராக்கள் 8 மடங்கு வரை ஜூம் செய்யும் வசதியைக் கொண்டுள்ளன. முன்புறத்தில், செல்ஃபிக்களுக்காக 5MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
ஹானர் எக்ஸ் 7 சி ஸ்மார்ட்போன், அதன் உறுதியான வடிவமைப்பு, சக்திவாய்ந்த பேட்டரி, பெரிய சேமிப்புத் திறன் மற்றும் மேம்பட்ட செயல்திறன் ஆகியவற்றால் நடுத்தர விலை ஸ்மார்ட்போன் சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.