/indian-express-tamil/media/media_files/2025/09/08/hotstar-subscription-2025-09-08-12-11-32.jpg)
வெறும் ரூ.100-க்கு 90 நாட்கள் ஹாட்ஸ்டார்... ஓ.டி.டிக்கு தனி சந்தா தேவையில்லை; ஜியோ, ஏர்டெல், விஐ ஆஃபர்கள்!
டிஜிட்டல் பொழுதுபோக்கு உலகில் ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், இந்த தளங்களை சந்தா செலுத்தி பார்ப்பது பலருக்கும் சவாலான விஷயமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வெறும் ரூ.100-க்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சில ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ திட்டங்களைப் பற்றி இங்கு காண்போம்.
ஜியோவின் ரூ.100 திட்டம்: 3 மாதங்கள் என்டர்டெயின்மென்ட்!
கம்மி செலவில் நீண்ட காலத்திற்கு ஹாட்ஸ்டார் பார்க்க விரும்புபவர்களுக்கு, ஜியோவின் ரூ.100 திட்டம் ஒரு சிறந்த தேர்வு. இதில், 90 நாட்களுக்கு (3 மாதங்கள்) ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இலவசமாக கிடைக்கிறது. இதன் மூலம், ஒருமுறை ரீசார்ஜ் செய்தால்போதும், தொடர்ந்து 3 மாதங்களுக்கு உங்களுக்குப் பிடித்த மூவிகள், நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை மொபைல், டிவி, லேப்டாப் என அனைத்து சாதனங்களிலும் பார்க்கலாம். இத்திட்டத்தில் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ.100 திட்டம்: குறுகிய காலத்தில் எக்ஸ்ட்ரா டேட்டா!
குறுகிய காலத்திற்கு ஹாட்ஸ்டார் மற்றும் அதிக டேட்டாவை விரும்புபவர்களுக்கு ஏர்டெல் திட்டம் பொருந்தும். ₹100 மதிப்புள்ள இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், 30 நாட்களுக்கு 5 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது. இது டேட்டா-மட்டும் திட்டம் என்பதால், இதில் அழைப்பு அல்லது எஸ்.எம்.எஸ். வசதிகள் இல்லை. இதன் முக்கிய நன்மை, நீங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை இலவசமாகப் பெறுவதுதான்.
Vi ரூ.151 திட்டம்: 90 நாட்கள் ஹாட்ஸ்டார்!
ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, வோடஃபோன் ஐடியா (Vi) வழங்கும் ரூ.151 திட்டம் சற்று விலை அதிகம். ஆனால், இதில் 90 நாட்களுக்கு ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. இத்திட்டத்தில் வழங்கப்படும் டேட்டாவின் அளவு 4 ஜிபி மட்டுமே. நீண்ட கால ஓடிடி நன்மையை எதிர்பார்த்தால், இந்த திட்டமும் நல்ல தேர்வாக இருக்கும்.
இந்தத் திட்டங்களை யார் பயன்படுத்தலாம்?
இந்த ஓடிடி டேட்டா திட்டங்களை பயன்படுத்த, உங்கள் எண்ணில் ஏற்கனவே பிளான் ஆக்டிவ்வில் இருக்க வேண்டும். இவை டேட்டா-மட்டும் திட்டங்கள் என்பதால், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் இதில் இயங்காது.
இந்தத் திட்டங்களின் நன்மைகள் என்ன?
தனி ஹாட்ஸ்டார் சந்தாவை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்த விலையில் ஓடிடி சேவைகளை அனுபவிக்கலாம். அதிவேக டேட்டா கிடைப்பதால், நிகழ்ச்சிகளை தடையின்றி பார்க்கலாம். ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், நீண்ட காலத்திற்கு பொழுதுபோக்கு தீர்வு கிடைக்கிறது. உங்கள் தேவைக்கேற்ப, ரூ.100-க்கு 90 நாட்கள் ஹாட்ஸ்டார் வழங்கும் ஜியோ திட்டம் அல்லது வேறு ஏதேனும் ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, ஓடிடி உலகின் சிறந்த அனுபவத்தை மிகக் குறைந்த விலையில் அனுபவிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.