ஆதித்யா எல்.1 விண்கலத்தின் சூட் (SUIT ) கருவி சூரியனை படம் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ அண்மையில் பகிர்ந்தது. அந்தவகையில் சூட் எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்து இஸ்ரோ புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்தியா ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. கடந்த செப்.2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் சூரியனின் எல்.1 புள்ளியை நோக்கி பயணித்து வருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் விண்கலம், திட்டமிடப்பட்ட எல்.1 புள்ளியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன் ஆதித்யா எல்.1 விண்கலத்தில் இருக்கும் கருவிகளில் ஒன்றான
சூட், (சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT)) கருவி முதல் முறையாக சூரியனின் full-disk படங்களை புற ஊதா அலைநீளங்களில் (ultraviolet wavelengths) படம்பிடித்து அனுப்பியது.
இந்நிலையில், இந்த படங்களை சூட் கருவி எவ்வாறு படம் எடுத்தது என்பது குறித்து இஸ்ரோ வீடியோ பகிர்ந்துள்ளது. டிச.5-ம் தேதி எடுக்கப்பட்ட வீடியோவில், சூட் கருவியின் போர்டு ஷட்டர் திறப்பதும், மூடுவதும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. அதாவது இதன் மூலம் சூரிய கதிர்வீச்சு பேலோட் மற்றும் தெர்மல் பில்டரில் நுழைந்து படம் எடுக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“