விண்வெளியில் புவியீர்ப்பு சக்தி இல்லை என்பதால் அங்கு நிலையாக நிற்க முடியாது. பொருட்கள் வைத்திருந்தாலும் அது சூழலும். அந்த வரிசையில் விநோதமாக, ஆச்சரியமளிக்கும் வகையில், விண்வெளி மற்றும் விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் எப்படி கழிப்பறை பயன்படுத்துவர் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு ஆச்சரியமளிக்கும் பதிலும் கிடைத்தன.
வழக்கமான கழிப்பறைகள் புவியீர்ப்பு விசையின் மூலம் செயல்படுகின்றன. ஆனால் மைக்ரோகிராவிட்டி சூழலில், கழிவுகள் எளிதாக டாய்லெட்டில் மிதக்கும்.
காற்று சுழற்சியின் பயன்பாட்டின் மூலம் கழிவுகளை கட்டுப்படுத்தும் சிறப்பு விண்வெளி கழிப்பறைகளின் பயன்பாடு தான் இதற்கு தீர்வு ஆகும். UWMS என்றும் அழைக்கப்படும் சமீபத்திய மாடலில் vacuum system இருக்கும். இது கழிவறை மூடியைத் திறந்தவுடன் கழிவுகளைச் சேகரித்து வாசனையைக் கட்டுப்படுத்த செயல்படத் தொடங்குகிறது.
இந்த கழிப்பறையில் சிறுநீர் கழிக்க புனல் ஒன்றும் இருக்கும்.
கழிப்பறையில் கசிவுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவர். கழிப்பறையை பயன்படுத்தும் போது விண்வெளி வீரர்கள் மிதக்காமல் இருக்க திடமான கம்பிகள் வைத்து தனித்துவமாக கட்டமைத்துள்ளனர்.
வீரர்களின் கழிவுகள் மூடப்பட்ட கண்டெய்னரில் வைக்கப்படுகின்றன; சிறுநீர் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாப்பான குடிநீராக மாற்றப்படுகிறது; திடக்கழிவுகள் compressed ஆகி பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது பொதுவாக எரிக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“