கூகுள் மேப்ஸ் உலகளவில் மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் வெப் மேப்பிங் தளங்களில் ஒன்றாகும். கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த செயலியில் தற்போது பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் மேப்ஸ் செயலியிலேயே லைவ் லொக்கேஷன் (live locations) ஷேரிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அம்சம் மூலம் உங்கள் இருப்பிடத்தை மற்றவருக்கு நேரடியாகப் பகிரலாம். மேலும் இந்த அம்சம் உங்கள் ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் அதை கண்டுபிடிக்கவும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் மேப்ஸ் லைவ் லொக்கேஷன் (2 மீட்டர் துல்லியத்துடன்) மற்றவருக்கு real-time access வழங்கும். அதோடு பேட்டரி சதவீதம் மற்றும் பிற முக்கியமான தகவல்களையும் வழங்குகிறது. இந்நிலையில் நீங்கள் தவறுதலாக உங்கள் போனை தொலைத்துவிட்டால் அல்லது போன் திருடு போனால், அந்நேரத்தில் நீங்கள் மற்றவருடன் லைவ் லொக்கேஷன் பகிர்ந்து கொண்டிருந்தால் இதை வைத்து உங்கள் ஸ்மார்ட் போனை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
மிக முக்கியமாக உங்கள் போன் ஆக்டிவ் இன்டர்நெட் கனெக்ஷன் மற்றும் உங்கள் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகாமல் இருக்க வேண்டும். அப்போது இதை எளிதாக செய்யலாம்.
கூகுள் மேப்ஸில் லைவ் லொக்கேஷன் பயன்படுத்துவது எப்படி?
ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் கூகுள் மேப்ஸ் லைவ் லொக்கேஷன் வசதியை பயன்படுத்தலாம். கூகுள் மேப்ஸ் சமீபத்திய வெர்ஷனை அப்டேட் செய்து வலப் புறத்தில் உள்ள “profile picture” ஐ கிளிக் செய்து
location sharing > new share கொடுத்து எவ்வளவு நேரம் லைவ் லொக்கேஷன் பகிர வேண்டும், யாருக்கு பகிர வேண்டும், எந்த தளத்தில் பகிர வேண்டும் என்பதை செலக்ட் செய்யவும். அடுத்து Maps app permission கொடுத்து லைவ் லொக்கேஷனை மற்றவருக்கு பகிரலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“