Advertisment

ட்விட்டரில் ப்ளூ டிக்: எப்படி பெறுவது? என்ன அளவுகோல்?

யார் யார் கணக்கிற்கெல்லாம் ட்விட்டர் ப்ளூ டிக் வழங்கப்படும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How is the blue tick awarded in twitter? explained. -ட்விட்டரில் ப்ளூ டிக்: எப்படி பெறுவது? என்ன அளவுகோல்?

உண்மையான, குறிப்பிடத்தக்க மற்றும் அதிமாக செயல்பாட்டில் இருந்த ட்விட்டர் கணக்குகளுக்கு மட்டுமே  ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக் வழங்கி வந்தது. இதை 2017-ம் ஆண்டோடு நிறுத்தி இருந்தது. ஆனால் ஜனவரி 22 முதல் மறுபடியும்  ப்ளூ டிக் வழங்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

யார் யாருக்கெல்லாம் இந்த ப்ளூ டிக் வழங்கப்படும் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.

ஏன் ட்விட்டர் ப்ளூ டிக் வழங்க ட்விட்டர் கணக்குகளை சரிபார்ப்பதை நிறுத்தியது?

ப்ளூ டிக் வழங்குவதை சிலர் மதிப்பு மிக்க ஒன்றாக பார்ப்பதால்,அவர்களுக்கு ப்ளூ டிக் வழங்குவதில் ட்விட்டருக்கு கருத்து முரண் ஏற்பட்டுள்ளது. எனவே ட்விட்டர் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தோடு ப்ளூ டிக் வழங்குவதை நிறுத்திக்கொண்டது. மற்றும் இந்த ஆண்டு முதல் ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட சில ட்விட்டர் கணக்குகளை மீண்டும் சரிபார்க்க உள்ளதாக கூறியுள்ளது.

"ட்விட்டர் கணக்குகளை சரிபார்ப்பதற்காக பொது அறிவிப்பு வெளியிடுகையில் அதிகமான கருத்து முரண் ஏற்பட்டது. எனவே அதை நிறுத்திக்கொண்டோம்" என தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

ட்விட்டர் மீண்டும் எப்படி புதிய முறையில் கணக்குகளை சரிபார்க்க உள்ளது?

ட்விட்டர் கணக்குகளை சரி பார்ப்பதற்கு என்றே ஒரு புதிய செயலியை உருவாக்கியுள்ளது. ப்ளூ டிக் வேண்டும் என விரும்புவோர் அந்த செயலி மூலமாக அப்ளை செய்து கொள்ளலாம். அப்பளை செய்யும் நபர் பற்றிய முழு விபரங்களை அதில் தெரிவிக்க வேண்டும். அதோடு சில ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதை இணையம் மூலமாகவும், ஏதெனும் தனி நபரைக் கொண்டோ டிவிட்டர் சரிபார்க்கும்.

"இந்த புதிய கொள்கையின் படி ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு செயல்பாட்டில் இல்லாத கணக்குகளை தானாகவே நீக்க உள்ளோம்" என ட்விட்டரின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்

உண்மையான ட்விட்டர் கணக்குதான் என்பதை எப்படி கண்டறிய போகிறது?

"ஒரு கணக்கைப் பின்தொடர்பவர்களின் நம்பகத் தன்மையையும், நிலையான எண்ணிக்கையையும் கொண்டு மதிப்பீடு செய்ய உள்ளோம். அதோடு கணக்கைச் சரிபார்ப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படையான தகவல்களையும் அறிய உள்ளோம்" என்று ட்விட்டர் கூறியுள்ளது.

இந்த விதியின் கீழ் வராத கணக்கின் சரிபார்ப்பை திரும்பப்பெற ட்விட்டருக்கு முழு அதிகாரமும் உண்டு.

ட்விட்டர் கணக்கு செயலில் இருக்க வேண்டும் என்பதின் அர்த்தம் என்ன?

ஒரு ட்விட்டர் கணக்குக்குத் தேவையான அனைத்து படி நிலைகளையும் (புகைப்படம், கணக்கின் பெயர்)  நிரப்பியிருக்க வேண்டும். கணக்கை சரிபார்ப்பதற்கு சரியான அலைபேசி எண், மற்றும் இ- மெயில் முகவரி கொடுக்கப்பட வேண்டும். கணக்கைச் சரிபார்க்க விரும்பும் பயனர் கடந்த ஆறு மாதங்களில் அந்த கணக்கைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதோடு கடந்த ஆறு மாதங்களில் ட்விட்டரின் விதிகளை மீறியதற்காக 12 மணி நேரம் அல்லது 7 நாட்கள் 'ப்ளாக்' செய்யப்பட்டு இருக்க கூடாது.

நான் ஒரு பிரபலமோ அல்லது பெரிய தொலைக்காட்சி தொகுப்பாளரோ அல்ல. எனது கணக்கு சரிபார்க்கப்படுமா?

அதிகமாக பின் தொடர்பவர்களை கொண்டிருந்தால் கணக்கைச் சரிபார்ப்பதில் எந்த சிரமம் ஏற்படாது. ஆனால் குறைந்த அளவு பின் தொடர்பவர்கள் இருந்தால் வாய்ப்பு மிக குறைவு தான் என்கிறது ட்விட்டர்.

எந்த வகை பயனர்கள் சரிபார்க்கப்படுகிறார்கள்:

"பயனரின் ட்விட்டர் கணக்கு முக்கியமான அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் அல்லது பிராண்டுடன் தொடர்புடையவராக இருக்க வேண்டும். அதோடு பின்வரும் துறைகளில் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்"என்று ட்விட்டர் கூறுகிறது.

அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

# அதிகாரிகள், அமைச்சர்கள் உட்பட அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள்.

# நன்கு அறியப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளில் பணிபுரிபவர்கள்.

# செய்தி நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்.

# பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்கள்

# விளையாட்டு  துறையில் உள்ளவர்கள்.

# ஆர்வலர்கள், அமைப்பாளர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள்.

"கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் கணக்கை சரிபார்ப்பதற்கு பரிந்துரைகளைப் பெற்றுள்ளோம். இந்த ஆண்டு அவர்களுக்கென தனிப்பிரிவுகளை உருவாக்க உள்ளோம் என்று" இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம்  ட்விட்டர் தெரிவித்துள்ளது.

நான் எந்த பெரிய பிராண்டுடனும் தொடர்பில் இல்லை, ஆனால் எனக்கு 100,000 பின்தொடர்பவர்கள் உள்ளனர். 1800 பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு பத்திரிக்கையாளருக்கு ப்ளூ டிக் ஏன் வழங்கப்படுகின்றது?

ஊடகவியலாளர்கள் அதிகமான பின்தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், நன்கு அறியப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிகின்றார்கள். எனவே அவர்களுக்கு ப்ளூ டிக் வழங்கப்படுகின்றது.

பொது வெளியில் பயன்படுத்தப்படும் ஊடகவியலாளர்களின் கணக்குகள் சரிபார்ப்பதற்கு, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் முதலில் சரிபார்க்கப்படும். பின்னரே அவர்களுக்கு ப்ளூ டிக் வழங்கப்படும்.

எந்த நிறுவனத்தையும் சேராத அல்லது ஃப்ரீலான்ஸ் ஊடகவியலாளர்களின் கணக்குகள் சரிபார்ப்பதற்கு, கடந்த ஆறு மாதத்தில் அவர்கள் வெளியிட்ட  மூன்று செய்திகளையோ (பைலைன்கள்) அல்லது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள க்ரடிட்டையோ சான்றாக அளிக்க வேண்டும்.

ட்விட்டர் ஏன் செல்வாக்கு மிக்கவர்களை சரிபார்க்கிறது?  

டிஜிட்டல் படைப்பாளர்களில் கடந்த ஆறு மாதங்களாக புதிய படைப்புகளை பதிவேற்றம் செய்தவர்களின் கணக்கையும் சரிபார்ப்பதோடு,

பொழுதுபோக்குத் துறையுடன் தொடர்புடைய அனைவரின் கணக்குகளையும் சரிபார்க்க உள்ளது. அதோடு ஒருவர் இன்ஸ்டாகிராம் செல்வாக்கு மிக்கவராக இருந்தால் ட்விட்டரில் அவரது கணக்கு எளிதாக சரிபார்க்கப்படும்.

இதில் இணைய விளையாட்டு வீரர்களின் நிலை என்ன?

தொழில்முறையாக இணையதளத்தில் விளையாடும் அதிகாரப்பூர்வ குழு, பட்டியலிடப்பட்ட லீக்ஸ், அணிகள், தக்க வைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோரின் கணக்குகள் மட்டுமே சரிபார்க்கப்படும்.

சர்வதேச அளவில் நடைபெற்ற இணைய வீடியோ கேம் போட்டியில் விளையாடியவர்கள் ப்ளூ டிக் பெறுவதற்கு தகுதியானவர்கள். ஆனால் கடந்த ஆறு மாதங்களில், கோட்டாகு, பலகோன் அல்லது ஐ.ஜி.என் போன்ற செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களும் சரிபார்ப்புக்கு தகுதியுடையவர்கள்.

நான் மிகவும் செல்வாக்கு மிக்க நபர். எனது கணக்கு எவ்வாறு சரிபார்க்கப்படும்?

செல்வாக்கு மிகுந்த நபர்களின் கணக்குகளை ட்விட்டர் சரிபார்க்கும். ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

ட்விட்டரின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தகவல்களைப் பகிர்வதற்கும், சமூகத்தில் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்கும், சமூக பொருளாதார அரசியல் அல்லது கலாச்சார மாற்றத்தைக் ஏற்படுத்துவதற்கும், மற்றும் சமூகத்தை பேணி காப்பதற்கும் உழைப்பவர்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

இவர்கள் அனைவரும் கடந்த ஆறு மாதங்களில் தங்களின் ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்தி இருக்க வேண்டும். வன்முறை மிகுந்தவற்றை பதிவிட்டு இருக்க கூடாது. மற்றும் வேறுபட்ட பாலினத்தோரை கேலி செய்வது போன்ற பதிவுகளை தவிர்த்தவராக இருத்தல் வேண்டும்.

மேலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் 'குறிப்பிடத்தக்க' ஒரு தகுதியாவது அவர்கள் பெற்று இருக்க வேண்டும்.

பிரிவு அ - ட்விட்டர் செயல்பாடு

ட்விட்டர் அல்லாமல் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள்

ட்விட்டர் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் உள்ள .1% நபர்கள், நீங்கள் வசிக்கும் அதே  பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்

உங்களின் சுயவிபரம் சமீபத்திய கூகுள் தேடலில் அதிக முறை தேடப்பட்ட ஒன்றாகவும், ட்ரெண்டில் இருந்த ஒன்றாகவும் இருக்க வேண்டும்

அதில் 05% நபர்களுடன் உரையாடியது, டாக் செய்தது, மற்றும் அவர்களுடைய பின்தொடர்பவர்களின் வளர்ச்சி விகிதம் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

விக்கிபீடியாவில் குறிப்பிடத்தக்க கட்டுரை இருக்க வேண்டும். அதைப்பற்றிய குறிப்பிடத்தக்க  தரவுகள் என்சைக்கிளோபீடியாவில் (கலைக்களஞ்சியம்) இருக்க வேண்டும்.

நீங்கள் ஏற்படுத்திய ஹேஸ்டேக் சமூகத்தினரால் அதிகம் பேசப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். அதோடு அதிக நபர்களை சென்றடைந்திருக்க வேண்டும்

கடந்த ஆறு மாதங்களில் உங்களைப் பற்றியோ, நீங்கள் செய்யும் தொழில் பற்றியோ அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்களில் செய்தி வெளியிடப்பட்டு இருக்க வேண்டும்

அதிகாரப்பூர்வமான பொதுத்தளத்தில் தலமைப் பொறுப்பு வகிப்பரவாக இருத்தல் வேண்டும்.

சமீபத்தில் நடந்த நிகழ்வுகளில் பொது நலனுடன் ஈடுபட்டவர்கள், அவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆகியோரின் தகுதி, 'ஆ' பிரிவில் உள்ள தகுதிகளை சந்தித்தால் அவர்களின் ட்விட்டர் கணக்குகளும் சரிபார்க்கப்படும்.

உதாரணமாக, தொற்றுநோய் அல்லது பிற பொது சுகாதார நெருக்கடிகளின் போது உதவிய மருத்துவ வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளூர் அரசியல் தலைவர்கள், இயற்கை பேரழிவுகள் குறித்து செய்திகளை வழங்கிய பத்திரிகையாளர், மனித உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் போன்றோரின் கணக்குகளும் சரிபார்க்கப்படும் என ட்விட்டர் கூறியுள்ளது.

எனக்கு 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட 'பேன் பேஜ்'கணக்கு உள்ளது. எனது கணக்கை சரிபார்க்க முடியுமா?

நியூஸ்ஃபீட், கிண்டல், கேலி மற்றும் ரசிகர் கணக்குகள் (பேன் பேஜ்) போன்ற கணக்குகள் ப்ளூ டிக் பெற தகுதி இல்லை என்று கூறியுள்ளது.

என்னுடைய செல்லப்பிராணி பெயரில் தொடங்கப்பட்டுள்ள கணக்கை 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளது . அந்த பக்கத்திற்கு ப்ளூ டிக் கிடைக்குமா?

பொதுவாக செல்லப்பிராணி பெயரில் தொடங்கப்பட்டுள்ள கணக்கிற்கு ப்ளூ டிக் வழங்கப்படுவதில்லை. ஆனால் அந்தச் செல்லப்பிராணியின் கணக்கு சரிபார்க்கப்பட்ட நிறுவனம், பிராண்ட் அல்லது சரிபார்க்கப்பட்ட பொழுதுபோக்கு தயாரிப்புடன் நிறுவனத்துடன் நேரடித் தொடர்பில் இருந்தால் ப்ளூ டிக் பெற வாய்ப்பு உள்ளது.

மற்ற யாரெல்லாம் தகுதி இல்லாதவர்கள்?

பின்தொடர்பவர்களை தங்களின் தயாரிப்புகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் பயன்படுத்துபவர்கள், இயங்குதளத்தை  தவறான முறையில்  கையாளுதல் மற்றும் ஸ்பேம் மெசேஜ்கள் அனுப்புதல் போன்ற ட்விட்டரின் விதிமுறைகளை மீறுபவர்கள் இதற்கு தகுதி பெற மாட்டார்கள்.

மேலும், சர்வதேச நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தால் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச அமைப்பு அங்கீகரிக்கப்பட்ட

விசாரணை ஆணையத்தால் குற்றம் சுமத்தபட்டவர்கள் இதற்கு தகுதியற்றவர்கள்.

'ப்ளூ டிக்' வழங்கப்பட்ட என்னுடைய கணக்கு தொலைந்து விட்டது. இப்போது என்ன செய்வது?

கணக்கு செயல்பாட்டில் இல்லையென்றால், எந்தவித அறிவிப்பும் இன்றி 'ப்ளூ டிக்' நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கணக்கின் பெயரை மாற்றினாலோ அல்லது இதற்கு முன்பு வகித்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டாலோ உங்கள் கணக்கில் உள்ள ப்ளூ டிக் நீக்கப்படும். மற்றும் ட்விட்டரின் விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்படும். தொடர்ந்து விதிமுறை மீறல்கள் நீடித்தால் ப்ளூ டிக் நீக்கப்படும் என்கிறது ட்விட்டர்.

"தொடர்ச்சியான விதி முறை மீறல்கள் கண்டறியப்பட்டால் ப்ளூ டிக் நீக்கப்படும்" என இ - மெயில் மூலம் அளித்த பதிலில் ட்விட்டர் கூறியுள்ளது.

பெயர் அல்லது சுயவிபரத்தை மாற்றுவதன் மூலம் ஆள்மாறாட்டம் அல்லது வேண்டுமென்றே தவறாக வழிநடத்தும் கணக்குள் உடனடியாக ட்விட்டரில் இருந்து நீக்கப்படும்.

மேலும், வெறுக்கத்தக்க செயல் பாடுகளை பதிவிடுவது, வன்முறையை தூண்டுகிற வகையில் பேசுதல், இயங்குதளத்தை தவறான முறையில்  கையாளுதல், ஸ்பேம் மெசேஜ்கள் அனுப்புதல், தனிநபர்களைப் பற்றி அவர்களின் ஒப்புதல் இல்லாமல் பதிவிடுவது, மற்றும் தேர்தலில் தவறான பிரச்சாரங்கள் செய்ய ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்துவது போன்ற விதிமுறை மீறலில் ஈடுபட்டால், அந்த கணக்கு உடனடியாக நீக்கப்படும் எனக் கூறியுள்ளது.

சரிபார்க்கப்பட்ட கணக்குகள் இழக்கும் ஆபத்து ஏற்படும் நிலை வந்தால், இ - மெயில் மூலமாகவோ அல்லது புதியதாக உருவாக்கப்பட்ட அந்த செயலி மூலமாகவோ முன்னரே அறிவிக்கும்.

ஜனவரி 22, 2021- க்கு முன்னர் இது போன்ற மாற்றங்களை செய்தவராக இருப்பின், அவர்களது ப்ளூ டிக் நீக்க படமாட்டாது. மேலும் சரிபார்க்கப்பட்ட செயல்பாடுகளில் இல்லாத இறந்தவர்களின் கணக்குகளை நீக்க போவதில்லை என்றும், அவர்களின் நினைவலைகள்  ட்விட்டர் பக்கங்களில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Twitter
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment