Advertisment

மெட்டாவெர்ஸ் உலகில் பாலியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி - புதிய அப்டேட் எப்படி வேலை செய்யும்?

மெட்டாவெர்ஸ் உலகில் கூட்டு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டதாக பெண் புகார் கூறிய நிலையில், அதனை தடுப்பதற்கான புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
மெட்டாவெர்ஸ் உலகில் பாலியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி - புதிய அப்டேட் எப்படி வேலை செய்யும்?

மெட்டா நிறுவனம் தனது Horizon Worlds மற்றும் Horizon Venues விர்ச்சுவல் ரியாலிட்டி (VR)சிஸ்டமில், அவதார்களிடையை குறிப்பிட்ட அளவிலான இடைவெளி இருக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment

இதன் மூலம், மெட்டாவெர்ஸ் உலகில் தேவையற்ற தொடர்புகள் மற்றும் துன்புறுத்தல்களைத் தவிர்க்க முடியும் என தெரிவிக்கின்றனர். இந்த புதிய அப்டேட், மெட்டாவெர்ஸ் உலகில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக பெண் ஒருவர் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்டதையடுத்து வந்துள்ளது.

Horizon World துணைத் தலைவர் விவேக் ஷர்மாவின் கூற்றுப்படி, உங்கள் அவதாருக்கும் மற்றொரு அவதாருக்கும் இடையே 4 அடி இடைவெளி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் தனது வலைப்பக்கத்தில், "மெட்டாவெர்ஸ் உலகில் இணைந்த 60 விநாடிகளுக்குள் என்னை வாய்மொழியாகவும், பாலியல் ரீதியிலும் 3 முதல் 4 ஆண்கள் சேர்ந்து துன்புறுத்தினர். ஒரு பயங்கரமான அனுபவம் மிக வேகமாக நடந்தது.

நான் பாதுகாப்புத் தடை குறித்து யோசிப்பதற்கு முன்பே அனைத்தும் நடந்துவிட்டது. நான் உறைந்து போனேன்" என புகாரளித்திருந்தார்.

பேஸ்புக் நிறுவனம் கடந்தாண்டு மெய்நிகர் உலகை உருவாக்கிட, தனது பெயரை மெட்டா என மாற்றிக்கொண்டது. இந்த மெட்டாவெர்ஸ் உலகம் மூலம் டிஜிட்டல் மற்றும் நிஜ உலகில் உள்ள இடைவெளியை சரிசெய்ய திட்டமிட்டது. மெட்டாவெர்ஸ் என்னும் டிஜிட்டல் உலகில், உண்மையான நபர்கள் டிஜிட்டல் அவதார்களில் வளம்வருவார்கள்.

புதிய அப்டேட் எப்படி வேலை செய்யும்?

புதிய அப்டேட் மூலம், எதெனும் அவதார், உங்களது பர்சனல் பவுண்டரி இடத்திற்குள் வர முயற்சித்தால், அந்த அவதாரின் முன்னோக்கி இயக்கம் அமைப்பு தானாகவே நிறுத்தப்படும்.

இதுதொடர்பாக பேசிய விவேக் ஷர்மா, "ஒரு அவதாரத்தின் கைகள் அத்துமீறி நுழைந்தால் உடனே அவை மறைந்துவிடும். ஒருவரின் தனிப்பட்ட எல்லைக்குள் வேறு அவதார் நுழைய முடியாது.

எதிர்காலத்தில், புதிய கட்டுப்பாடுகள் மற்றும் UI மாற்றங்களைச் சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்வோம், மக்கள் தங்கள் தனிப்பட்ட எல்லையின் அளவைத் அவர்களே தீர்மானிப்பது போன்ற வகையில் அப்டேட் வடிவமைக்கப்படும்.

விர்ச்சுவல் ரியாலிட்டி உலகில், மக்கள் எவ்வளவு பாதுகாப்பானதாக பழகலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தனிப்பட்ட எல்லையாகும். இது ஒரு முக்கியமான ஸ்டெப் ஆகும். இன்னும் நிறைய வரவிருக்கிறது. VRஇல் மக்கள் வசதியாக வாழ்ந்திட, புதிய வழிகளை நாங்கள் தொடர்ந்து சோதித்து ஆராய்வோம்" என்றார்.

மார்க் ஜூக்கர்பெர்க் திட்டம், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து நேராக VR ஹெட்செட்களுக்கு மக்களை வரவைப்பது தான். மெட்டா, Horizon Worlds virtual reality platform-ஐ வட அமெரிக்காவில் டிசம்பர் மாதத்தில் பொதுமக்களுக்காக தொடங்கப்படவுள்ளது. இது டிஜிட்டல் உலகில் பயணிக்கும் மெட்டாவர்ஸ் திட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு படியாகும்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் ஹெட்செட் அணியும் பயனர்கள், நண்பர்கள் அல்லது பிறருடன் Horizon உலகில் கேம்களை விளையாடலாம். தங்களுக்கான சொந்த மெய்நிகர் உலகங்களையும் உருவாக்கலாம். அதற்கு அவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.சரியான உபகரணங்களயும் வைத்திருக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Meta Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment