Advertisment

Tech InDepth: ஸ்மார்ட்போன்களில் Night mode ஆப்ஷன்.. எப்படி பயன்படுத்துவது?.. உங்கள் தீபாவளியை மேலும் அழகாக்குங்கள்!

Night Mode on smartphones: ஸ்மார்ட்போன்களில் நைட் மோட் ஆப்ஷன் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இங்கு பார்ப்போம். அழகான low-light photos எடுத்து உங்கள் தீபாவளியை மேலும் அழகாக்குங்கள்.

author-image
WebDesk
New Update
Tech InDepth: ஸ்மார்ட்போன்களில்  Night mode ஆப்ஷன்.. எப்படி பயன்படுத்துவது?.. உங்கள் தீபாவளியை மேலும் அழகாக்குங்கள்!

Diwali 2022: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை நாளில் மக்கள் அனைவரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடுவர். கோயில் சென்று வழிபட்டு வருவர். டிஜிட்டல் உலகில் இது மேலும் சிறப்பாகி உள்ளது. புத்தாடை அணிந்து அதை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியாக அதை நம் உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்வோம். இன்ஸ்டா,பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் போஸ்ட் பதிவிடுவோம்.

Advertisment

அந்தவகையில், ஸ்மார்ட்போன்களில் புகைப்படம் எடுப்பதற்கு என பல ஆப்ஷன்கள் உள்ளன. Portraits, Landscape, photos, live focus, Night mode என பல ஆப்ஷன்கள் உள்ளன. இதில், நைட் மோட்( Night mode) ஆப்ஷன் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்ப்போம். பட்டாசு வெடிப்பது, தீப ஒளிகளை அழகாக எடுக்க இந்த ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

Night mode என்றால் என்ன?

பெரும்பாலானா ஸ்மார்ட்போன்களில் நைட் மோட் ஆப்ஷன் உள்ளது. நிறுவனங்கள் தங்களது போன் வசதிகளை விலைக்கு ஏற்ப வழங்கி வருகிறார்கள். நைட் மோட் என்பது இரவு நேரங்களில் அதாவது குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுப்பதாகும். வெளிச்சம்(ஒளி) குறைவாக இருந்தால், படம் தெளிவாக இருக்காது. படத்தின் அம்சத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாது. அந்தவகையில், பிரத்தியேகமாக கொண்டு வரப்பட்டது தான் நைட் மோட் ஆப்ஷன். இந்த ஆப்ஷன் பயன்படுத்தும்போது, படத்திற்கு தேவையான வெளிச்சம் கொடுக்கும். படம் தெளிவாக, குறைந்த வெளிச்சத்தில் அழகான படத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Night mode ஆப்ஷன் படங்கள் எடுப்பது எப்படி?

எப்போதும் போல் உங்கள் ஸ்மார்ட்போன்களில் கேமரா பக்கத்திற்கு செல்ல வேண்டும். கேமரா பக்கத்தில் புகைப்படம் எடுக்க நிறைய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நைட் மோட் ஆப்ஷன் செலக்ட் செய்ய வேண்டும்.

இந்த ஆப்ஷன் பயன்படுத்தும் போது ஸ்டேபிலிட்டி ( stability)முக்கியம். உங்கள் போன் கேமரா மற்றும் நீங்கள் புகைப்படம் எடுக்கும் இமேஜ் ஸ்டேபிலிட்டி முக்கியம். அப்போது தான் நல்ல புகைப்படம் எடுக்க முடியும். சில ஸ்மார்ட்போன்களில் டைமர் அம்சம் உள்ளது. Night mode ஆப்ஷனில் டைமர் செட் செய்து, 2 அல்லது 3 விநாடிகள் டைமர் வைத்து எடுக்கலாம். அவ்வாறு செய்யும் போது, ஸ்டேபிலிட்டி கிடைக்கும்.

அடுத்து, போட்டோ எடுக்கும் முன்னதாகவே, இமேஜ், வெளிச்சம் மற்றும் கேமரா ஆங்கிள் (angle) செட் செய்து கொள்ள வேண்டும். unwanted shadows இல்லாமல் சரியாக செட் செய்து கொள்ள வேண்டும்.

Night mode செயல்பாடு

டைமர் செட் ஆப்ஷன் பயன்படுத்தி அதிக ஒளியைப் பெற 2 வழிகள் உள்ளன. ஒன்று சென்சாரைப் பெரிதாக்கலாம் அல்லது கேமரா ஷட்டரை அதிக நேரம் திறந்து வைத்திருக்கலாம். சென்சார் அளவை போன் மூலம் மாற்ற முடியாது, ஆனால் ஷட்டர் வேகத்தைக் கட்டுப்படுத்துவது சாப்ட்வேர் மூலம் சாத்தியமாகும்.

இருப்பினும், ஒளியைப் பெற அதிக நேரம் கேமரா ஷட்டரை திறந்து வைப்பது இமேஜின் கலரை சீர்குலைக்கும் மற்றும் சில மாற்றங்களை நிகழ்த்தும் என கூறியுள்ளனர்.

படங்களை ஒன்றுபடுத்தல்

Bracketing என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் எடுத்த புகைப்படங்களை ஒன்றாக சேர்க்கலாம். நவீன ஸ்மார்ட்போன் கேமராக்கள் ஒரு பட்டனைத் தொடும்போது நைட் மோட் அல்லது அதற்குச் சமமான அம்சங்களை வழங்குகின்றன. முன்னணி ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது.

நைட் மோட் ஒரே மாதிரியாக இருக்காது

அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் நைட் மோட் அம்சம் ஒரே மாதிரியாக இருக்காது. அதேசமயம் ஒரே மாதிரியாக low-light photos இருக்காது. போன் அம்சம், சென்சார் அளவு, தரம், லென்ஸ் தரம் என அனைத்தும் பார்க்க வேண்டும். அதோடு புகைப்படம் எடுக்கும் திறன் (photography skills) என அனைத்தும் ஒரே காரணிகளாக இருக்க வேண்டும். நைட் மோட் ஒவ்வொரு பிராண்ட் போன்களுக்கும் மாறுபடும்.

உதாரணமாக, கூகுள் பிக்சல் போனில் உள்ள ‘நைட் சைட்’ அம்சம், சிறப்பானதாக உள்ளது. iPhone 14 Pro, iPhone 13 Pro, Samsung Galaxy S22 Ultra, OnePlus 10 Pro மற்றும் Vivo X80 Pro போன்ற பிற பிரீமியம் போன்களுக்கும் இது சிறப்பாக உள்ளது. இந்த ஃபோன்களில், கேமரா ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர், லைட்டிங் என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment