/tamil-ie/media/media_files/uploads/2017/10/5oneplus-5-main1.jpg)
ஆப்பிள் மற்றும் சாம்சங்கினை பின்னால் தள்ளிய ஒன்ப்ளஸ் ( OnePlus 6)
OnePlus போன் மிகக் குறுகிய காலத்தில் இந்திய வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடித்த ஒன்றாகும். சீனா நாட்டின் தயாரிப்பான இந்த ஒன்ப்ளஸ் திறன்பேசி 2018ம் ஆண்டில் அதிக அளவு விற்பனையாகும் திறன்பேசி என்று ஒரு சர்வே கூறியுள்ளது.
Higher End திறன்பேசிகளில் ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் போன்கள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறது ஒன்பிளஸ் போன்.
இந்த காலாண்டில் அதிகம் விற்பனையான திறன்பேசிகள் (Higher - End)
ஒன்ப்ளஸ் போனின் வருடாந்திர வளர்ச்சி என்பது 19% என கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த இரண்டு காலாண்டுகளில் இதன் வளர்ச்சி விதம் 10% ஆகும்.
இந்த ஆண்டில் அதிகம் விற்பனையான ஹையர் எண்ட் போன்களில் முதல் இடத்தினைப் பிடித்திருப்பது ஒன்ப்ளஸ் 6 ( OnePlus 6) அதனைத் தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி S9 ப்ளஸ், ஒன்ப்ளஸ் 5T போன்களும் இடம் பெற்றுள்ளன.
To read this article in English
சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களைப் போல் இந்தியாவின் பெஒர்கரிய நகரங்களில் தன்னுடைய ஆஃப்லைன் ஸ்டோர்களை நிறுவுவதில் மும்பரமாக செயல்பட்டு வருகிறது ஒன்ப்ளஸ் நிறுவனம்.
இந்தியாவின் மொத்த ஸ்மார்ட்போன் மார்க்கெட்டுகளில் 18% இடத்தினை தக்கவைத்திருக்கிறது ஒன்ப்ளஸ் திறன்பேசிகள்.
ஆப்பிள் தன்னுடைய இடத்தினை எப்படி ஒன்ப்ளஸ் மற்றும் இதர நிறுவனங்களிடம் இழந்தது?
கடந்த சில வருடங்களாக ஐபோனின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகமாக இருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்ட் போன்களின் வருகை மற்றும் பட்ஜெட் போன்களுக்கான தேவைகள் அதிகரித்த காரணத்தால் ஐபோனை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.