how the Moon looks in 4K resolution : அப்போல்லோ விண்கலம் 13 நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முக்கியமான விண்கலம் ஆகும். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் அந்த விண்கலத்தின் ஆக்ஸிஜன் சாம்பர் வெடித்து சிதறியது. ஆனால் அந்த விண்கலத்தில் இருந்தவர்களை பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் பூமிக்கு அழைத்து வந்தது நாசா. நிலவின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி அவர்கள் ஸ்பேஸ்க்ராஃப்ட் மூலமாக பூமிக்கு வந்தனர். அந்த விண்கலத்தில் சென்றவர்கள் யாரும் நிலவில் கால் எடுத்து வைக்கவில்லை. இருந்த போதும் நிலவின் மேற்பரப்பு எப்படியாக இருந்தது என்பதை அவர்களால் நன்றாக அறிய முடிந்தது.
அப்போல்லோ 13 செய்ய முடியாத காரியத்தை ஹை-ரெசலியூசன் கேமராவை கொண்டு லூனார் ரீகொனைஸ்சன்ஸ் ஆர்பிட்டர் மூலமாக நிறைவேற்றியுள்ளது நாசா. 4K ரெசலியூசன் கொண்ட இந்த கேமராவில் நிலவின் மேற்பரப்பு படம் பிடிக்கப்பட்டுள்ளது. 2 நிமிடங்கள் 24 நொடிகள் ஓடும் இந்த வீடியோவை தங்களின் யூடியுப் பகுதியில் அப்லோட் செய்துள்ளது நாசா.
அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்...
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்
இந்த வீடியோ நிலவின் வெளிபரப்பினை காட்டுவதோடு மட்டுமின்றி, அப்போல்லோ 13-ல் எது போன்ற சூழலில் திட்டம் தோல்வி அடைந்தது என்றும், நிலவின் ஈர்ப்பு சக்தியை வைத்து எப்படி அந்த விண்கலம் மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்பட்டது என்பதையும் விளக்குகிறது. அப்போது கீழே இருக்கும் ஆராய்ச்சியாளர்களுடன் பேச ரேடியோ அலைகள் மட்டுமே உதவிகரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.