உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருந்த முழு சூரிய கிரகணம் நேற்று இரவு நிகழ்ந்தது. பெரும்பாலான மக்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை நிகழும் முழு சூரிய கிரகணம் நேற்று ஏப்ரல் 8, திங்கட்கிழமை இரவு இந்திய நேரப்படி இரவு 9.13 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 9 செவ்வாய் கிழமை அதிகாலை 2.22 மணி வரை நீடித்தது. இந்த அரிய நிகழ்வை விஞ்ஞானிகள், பொது மக்கள் கண்டு ரசித்தனர்.
முழு சூரிய கிரகணத்தின் போது நிலவு சூரியனைக் கடந்து அதன் ஒளியை முழுமையாக மறைத்தது. சூரியன் ஒளியில் வைரம் போல் ஜொலித்தது. முழு சூரிய கிரகணம் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவின் சில பகுதிகளில் மட்டும் தென்பட்டது. சில கரீபியன் நாடுகள், கொலம்பியா, வெனிசுலா, ஸ்பெயின், யுனைடெட் கிங்டம், அயர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் பகுதி கிரகணம் தெரிந்தது. இருப்பினும் இந்தியாவில் இந்த கிரகணம் தென்படவில்லை. ஆசிய நாடுகளில் கிரகணம் தென்படவில்லை.
விண்வெளி நிலையத்தில் இருந்து கிரகணம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் கிரகணத்தின் 2 காட்சிகளைக் காண முடிந்தது. நிலவு சூரியனுக்கு முன்னால் கடந்து சென்றது மற்றும் சந்திரனின் நிழல் பூமியைக் கடந்து சென்றது ஆகிய காட்சிகளை கண்டனர்.
நாசாவின் பகிர்ந்த மற்றொரு வீடியோ
இண்டியானாபோலிஸ் நடந்த கிரகண காட்சிகள் முழுவதையும் நாசா வீடியோவாக பகிர்ந்துள்ளது. விண்வெளி ஏஜென்சியின் கூற்றுப்படி, 800 ஆண்டுகளுக்குப் பின் இந்த நகரம் சந்தித்த முதல் வான நிகழ்வு இதுவாகும்.
ஸ்டார்லிங்க்
செயற்கைக்கோள் இணைய விண்மீன், ஸ்டார்லிங்க், அதன் செயற்கைக்கோள் ஒன்றில் இருந்து கிரகணத்தின் போது சுற்றுப் பாதைதையில் எடுத்த வீடியோவை வெளியிட்டது.