/tamil-ie/media/media_files/uploads/2022/12/5G-India.jpg)
5G தொழில்நுட்பம்
இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏர்டெல், ஜியோ 5ஜி வழங்கப்பட்டு வருகிறது. மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில போன்களில் நேரடியாக 5ஜி பயன்படுத்தலாம் அல்லது சில போன்களில் சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டவுடன் 5ஜி சேவை பயன்படுத்தலாம். அந்தவகையில் சமீபத்தில் ஐபோனுக்கு 5ஜி அப்டேட் வழங்கப்பட்டது. iOS 16.2 stable update வழங்கப்பட்டது. iPhone SE 2022,
iPhone 12-series, iPhone 13-series, iPhone 14-series ஆகியவற்றில் 5ஜி பயன்படுத்தலாம்.
ஏர்டெல் 5ஜி
ஐபோனில் ஏர்டெல் 5ஜி -க்கு மாற்றவது மிக எளிது. ஜியோ 5ஜி போன்று Trial program அதில் இல்லை. பயனர்கள் தங்கள் செட்டிங்க்ஸ் அமைப்பை மாற்றி பயன்படுத்த தொடங்கலாம். உங்கள் போன் 5ஜி அப்டேட், சிம் 5ஜி அப்டேட் பெற்றவுடன் செட்டிங்க்ஸ் > மொபைல் டேட்டா > மொபைல் டேட்டா ஆப்ஷன்ஸ் > வாய்ஸ் & டேட்டா பக்கத்திற்கு செல்ல வேண்டும். இப்போது இங்கு 5ஜி எனக் கொடுக்கப்பட்டிருக்கும் அதை செலக்ட் செய்து உங்கள் போனை 5ஜி டேட்டாவிற்கு மாற்றிக் கொள்ளலாம். 5G network indicator உங்களுக்கு உடனடியாக காண்பிக்கப்படும்.
ஜியோ 5ஜி
ஜியோ தனது பயனர்களுக்கு இன்னும் நேரடியாக 5ஜி சேவை வழங்கவில்லை. 5G trials மூலம் சேவை வழங்குகிறது. ஜியோ பயனர்கள் 5ஜி பயன்படுத்த ‘ஜியோ 5ஜி வெல்கம் ப்ரோக்ராம்’ (Jio 5G Welcome Program) பயன்படுத்தி sign up செய்ய வேண்டும். இந்த வசதி கடந்த மாதத்திலிருந்து அதிகப்படியான பயனர்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது.
இதற்கு மை ஜியோ ஆப் (MyJio app) மூலம் sign up செய்ய வேண்டும். sign up செய்ய ஓரிரு நாளில் 5ஜி பயன்படுத்துவதற்கான அனுமதி மெசேஜ் அனுப்பபடும். அடுத்து பயனர்கள் ரூ.239 திட்டத்தில் ரீசார்ஜ் செய்து 5ஜி பயன்பாட்டை தொடங்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.