பாரத் பே, டிசம்பர் 5 அன்று ஷீல்டு (Shield) என்ற புது வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது யு.பி.ஐ மோசடியில் இருந்து அதன் பயனர்களைப் பாதுகாக்கும் ஒரு விரிவான பாதுகாப்புத் திட்டமாகும். இந்த திட்டத்தில் பதிவு செய்யும் பயனர்கள் மோசடி, ஃபிஷிங் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
முதல் 30 நாட்களுக்கு இந்த வசதியை இலவசமாக பெறலாம், அதன்பின் மாதம் ரூ.19 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தச் சேவையானது 5,000 ரூபாய் வரையிலான யு.பி.ஐ மோசடிக்கு எதிராக விரிவான பாதுகாப்பை வழங்குகிறது.
மோசடியின் தீவிரத்தைப் பொறுத்து, பயனர்கள் UPI அறிக்கை, எஃப்ஐஆர்/போலீஸ் தகவல் நகல், உரிமைகோரல் படிவம், UPI கணக்கைத் தடுப்பதை உறுதி செய்தல் மற்றும் காப்பீட்டாளரால் தேவைப்படும் ஆவணங்கள் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பாரத் பே ஷீல்டு வசதி-ஐ எவ்வாறு ஆக்டிவேட் செய்வது?
பாரத் பே ஆப்பின் ஹோம் பக்கத்தில் ஷீல்டு வசதி என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யலாம். பாரத் பே ஷீல்டு பானரை கிளிக் செய்து பயன்படுத்தலாம். முதல் முறை செய்யும் போது ரூ.1 பேமெண்ட் உங்கள் contact நபர்களுக்கு அனுப்பி தொடங்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“