/indian-express-tamil/media/media_files/mL3JFEqClMHZUKs0vIMt.jpg)
கனரா வங்கி மத்திய அரசின் வங்கியாகும். நாடு முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. மக்களின் வசதிக்காக தனது சேவைகளை ஆன்லைனிலும் வழங்குகிறது. வங்கி கணக்கு தொடங்குவது, பணப் பரிவர்த்தனை, ஸ்டேட்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைனில் வழங்குகிறது. நெட் பேங்கிங் சேவைககள் சேவைகளை ஆக்டிவேட் செய்தால் கூடுதல் வசதிகளையும் பெறலாம். இதற்கு வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் கஸ்டமர் ஐ.டிபோதும். இது உங்கள் வங்கி பாஸ்புக்கில் கொடுக்கப்பட்டிருக்கும்.
1. கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய பக்கம் செல்லவும். நெட் பேங்கிங் தேர்ந்தெடுத்து New Registration எனக் கொடுக்கவும்.
2. அடுத்து நெட் பேங்கிங்கிற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அதை டிக் செய்யவும்.
3. பதிவு பக்கத்தில், தேவையான தகவலை நிரப்பவும். உங்கள் கணக்கு எண், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண், டெபிட் கார்டு எண் மற்றும் வங்கி வழங்கிய வாடிக்கையாளர் ஐடி (customer ID) என அனைத்தையும் குறிப்பிடவும்.
4. அடுத்து OTP authentication பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட எண்ணை குறிப்பிடவும். ஓ.டி.பி அனுப்பபடும். அதையும் உள்ளிடவும்.
5. இப்போது நெட் பேங்கிங் சேவை பயன்படுத்த பாஸ்வோர்ட் கிரியேட் செய்யப்பட வேண்டும். உங்களுக்கு விருப்பமான பாஸ்வோர்ட் (அங்கு கொடுக்கப்பட்டுள்ள தேவைக்கு ஏற்ப) கொடுத்து submit கிளிக் செய்யவும்.
6. இந்த விவரங்களை பூர்த்தி செய்த பின் கனரா வங்கி நெட் பேங்கிங் ஹோம் பேஜிற்கு அனுப்பபடுவீர்கள்.
7. இப்போது உங்கள் வாடிக்கையாளர் ஐடி மற்றும் நீங்கள் கிரியேட் செய்த புதிய பாஸ்வோர்டை உள்ளிட்டு லாக்கின் செய்யவும்.
8. இப்போது உங்கள் ஏ.டி.எம் பின், டெபிட் கார்டு எண் மற்றும் கார்டு எக்ஸ்பைரி தேதியை உள்ளிட வேண்டும்.
9. அடுத்தாக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில், வங்கியிலிருந்து இரண்டாவது OTPயைப் பெறுவீர்கள். இது உங்கள் பரிவர்த்தனை பாஸ்வேர்ட் (Transaction password) செட் செய்வதற்கான ஓ.டி.பி ஆகும்.
10. பரிவர்த்தனை பாஸ்வேர்ட் கிரியேட் செய்தபின் உங்கள் நெட் பேங்கிங் activation process முடிவடையும். இதன் மூலம் நீங்கள் கனரா வங்கியின் பல்வேறு சேவைகளை ஆன்லைனில் எளிதாக பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.