கிரெடிட் கார்டு ஆக்டிவேட் செய்யும் முன் அதன் ஆக்டிவேட்ஷன் ப்ராசஸ் முக்கியமான ஒன்று. கிரெடிட் கார்டுகளை ஆக்டிவேட் செய்யும் செயல்முறை வங்கிக்கு வங்கி வேறுபடும். எல்லா கிரெடிட் கார்டுகளும் ஒரே மாதிரி இருக்காது. எனவே, உங்கள் கிரெடிட் கார்டைப் பெறும்போது கார்டின் வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.
சில வங்கி கார்டுகள் ஆன்லைனில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். சில கார்டுகள் ஏ.டி.எம் சென்று கார்டு
ஸ்வைப் செய்வதன் மூலம் ஆக்டிவேட் செய்ய வேண்டும். இது வங்கி வழிமுறைகளைப் பொறுத்தது. இங்கு ஆன்லைனில் கிரெடிட் கார்டு ஆக்டிவேட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
ஆன்லைனில் கிரெடிட் கார்டு ஆக்டிவேட் செய்வது எப்படி?
நெட்பேங்கிங் அல்லது வங்கியின் மொபைல் ஆப் மூலம் உங்கள் கிரெடிட் கார்டை ஆன்லைனில் ஆக்டிவேட் செய்யலாம்.
1. நெட்பேங்கிங் மூலம் ஆக்டிவேட் செய்ய வங்கியின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கம் சென்று லாக்கின் செய்யவும்.
2. அங்கு ஹோம் பக்கத்தில் ‘Credit Card Activation’ ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை செலக்ட் செய்யவும்.
3. தேவையான விவரங்கள் உங்கள் கிரெடிட் கார்டு எண், பிறந்த தேதி மற்றும் கார்டு எக்ஸ்பைரி தேதி ஆகியவை குறிப்பிடவும்.
4. சில தருணங்களில் உங்கள் ஏ.டி.எம் பின் நம்பர் அல்லது புதிய பின் செட் செய்யும் படி கேட்கும்.
5. அதே போன்று உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கும் ஓ.டி.பி அனுப்பபடும். இதை வெரிபை செய்தபின் கார்டு ஆக்டிவேட் செய்யப்படும். மொபைல் ஆப் மூலம் ஆக்டிவேட் செய்வதும் இதே போன்று நடைமுறை தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“