ஊழியர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் EPF (Employee Provident Fund) எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதியை வழங்கும். பொதுவாக இது மாதம் தோறும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களது பி.எப். கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. மத்திய அரசு இதற்கு வட்டியும் வழங்குகிறது. ஊழியர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு இந்த தொகையை எடுத்துக் கொள்ளலாம்.
இ.பி.எஃப்.ஓ-ல் உறுப்பினராக உள்ள நபர்களுக்கு யு.ஏ.என் (Universal Account Number) என்ற தனித்துவ அடையாள எண் வழங்கப்படும். இது 12 இலக்க எண் ஆகும். இதை இ.பி.எஃப்.ஓ போர்ட்டலில் ஆக்டிவேட் செய்து பல்வேறு சேவைகளை பெறலாம். பி.எஃப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும் திரும்ப பெறலாம். இந்த யு.ஏ.என் ஆக்டிவேட் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம். இதை வைத்து தான் உங்கள் பி.எஃப் கணக்கில் அனைத்து சேவைகளையும் பெற முடியும்.
1. முதலில் இ.பி.எஃப்.ஓ-ன் அதிகாரப்பூர்வ UMANG ஆப் ஓபன் செய்யவும். உங்கள் அக்கவுண்ட்க்குள் லாக்கின் செய்யவும்.
2. சர்ச் பாரில் ‘EPFO’ என்று டைப் செய்து தேடவும்.
3. இப்போது வரும் பக்கத்தில் Scroll டவுன் செய்தால் ‘UAN activation’ என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
4. இதில் உங்கள் 12 இலக்க யு.ஏ.என் எண், பெயர், பிறந்த தேதி, மொபைல் எண்,மற்றும் இ-மெயில் ஐ.டி ஆகியவை பதிவிட வேண்டும்.
5. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும்.
6. ஓ.டி.பி வெரிவிக்கேஷன் செய்த பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு இ.பி.எஃப் அக்கவுண்ட் செயல்படுத்துவதற்கான தகவல் அளிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“