இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. யு.பி.ஐ மூலம் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளைப் பயன்படுத்தி மக்கள் பணப் பரிவர்த்தனைகளை செய்து வருகின்றன. இந்நிலையில் யு.பி.ஐ மூலம் குறிப்பிட்ட நாடுகளுக்கு அதாவது வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பலாம். மத்திய அரசு இதற்கான ஒப்பந்தகளை செய்துள்ளது. அதன்படி, தற்போது பூட்டான், ஓமான், அபுதாபி, நேபாளம், பிரான்ஸ், இலங்கை மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளில் யு.பி.ஐ சேவை கிடைக்கிறது. இந்திய ரூபாயை அந்நாட்டு பணமாக மாற்றுவதற்கு குறிப்பிடத்தக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதை செய்வதற்கு முன் யு.பி.ஐ சர்வதேச பேமெண்ட் ஆக்டிவேட் செய்ய வேண்டும்?
1. கூகுள் பே, போன் பே என எதுவாகினும் அதில் சென்று செட்டிங்ஸ் செல்லவும்.
2. Payment Management பக்கத்தில் உள்ள UPI International ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
3. இப்போது உங்கள் வங்கி கணக்கை செலக்ட் செய்யவும்.
4. அடுத்து ஆப்ஷனில் அங்கிருக்கும் ஆக்டிவேட் பட்டனை கொடுக்கவும்.
5. யு.பி.ஐ பின் உள்ளிட்டு ஆக்டிவேஷன் செயல்முறையை நிறைவு செய்யவும்.
இப்போது எப்படி பணம் அனுப்புவது?
1. யு.பி.ஐ சர்வதேச பேமெண்ட் ஆக்டிவேட் செய்ய செயலி, கூகுள் பே, போன் பே செல்லவும்.
2. இப்போது பெறுநரின் QR கோட் பெற்று அதை உங்கள் போனில் ஸ்கேன் செய்யவும்.
3. அடுத்த அனுப்ப வேண்டிய தொகையை வெளிநாட்டு பணத்தின் எண்ணிக்கையில் என்டர் செய்யவும்.
4. வங்கி கணக்கை தேர்வு செய்து யு.பி.ஐ பின் கொடுத்து பணத்தை அனுப்பவும். தற்போது ஒரு ட்ரான்ஷாக்ஷனுக்கு 2,00,000 ரூபாய் வரை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“