டெபிட் கார்டு அல்லது ஏ.டி.எம் கார்டு தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் புது ஏ.டி.எம் கார்டு வாங்கிநாளோ அல்லது பழைய கார்டை புதுப்பித்தாலோ அதை ஆக்டிவேட் செய்வது கட்டாயமாகும். அப்போது தான் பணம் எடுக்க மற்றும் பரிவர்த்தனை செய்ய முடியும். இதை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் சுலபமாக செய்யலாம். எஸ்.பி.ஐ டெபிட் கார்டு ஆக்டிவேஷன் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
இன்டர்நெட் பேங்கிங் மூலம் டெபிட் கார்டு ஆக்டிவேஷன்
உங்கள் புதிய எஸ்.பி.ஐ டெபிட் கார்டை ஆன்லைன் எஸ்.பி.ஐ போர்ட்டல் மூலம் ஆக்டிவேட் செய்யலாம்.
1. முதலில் OnlineSBI இணைய தளத்திற்குச் சென்று உங்கள் Personal banking லாக்கின் செய்து இன்டர்நெட் பேங்கின் யூசர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்ட்டை உள்ளிடவும்.
2. இப்போது e-services செலக்ட் செய்து ATM card services என்பதை கொடுக்கவும். இப்போது ஏ.டி.எம் பின் ஜெனரேட் செய்வதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்யவும்.
3. இப்போது உங்கள் ப்ரொபைல் பாஸ்வேர்ட் அல்லது ஓ.டி.பி என்டர் செய்து லாக்கின் செய்யவும்.
4. எந்த வங்கி கணக்குடன் டெபிட் கார்டு லிங்க் செய்யப்பட்டிருக்கிறது என்பதை செலக்ட் செய்யவும்.
5. இப்போது புதிய பின் நம்பர் அல்லது பழைய எண்களை மாற்றலாம்.
6. இதற்கு நீங்கள் விருப்பம் போல் பின் நம்பரின் முதல் 2 நம்பர்களை பதிவிடவும். இதை செய்தவுடன், பின் நம்பரின் கடைசி 2 நம்பர்கள் நீங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
7. இப்போது 4 நம்பர்களையும் மொத்தமாக டைப் செய்யவும். Confirm the change எனக் கொடுக்கவும்.
8. அவ்வளவு தான் இப்போது புதிய பின் நம்பர் செட் செய்யப்பட்டது. உங்கள் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“