Advertisment

ரேஷன் அட்டையில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா? 7 சிம்பிள் ஸ்டெப்ஸ்.. ஆன்லைனிலேயே செய்யலாம்!

How to add new family member's name in Ration card online : ரேஷன் அட்டையில் புதிய குடும்ப உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலமாக எளிதாக சேர்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரேஷன் அட்டையில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா? 7 சிம்பிள் ஸ்டெப்ஸ்.. ஆன்லைனிலேயே செய்யலாம்!

How To Add New Name In Ration Card | ரேஷன் அட்டை தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் வழங்கப்படுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவசமாக மற்றும் குறைந்த விலையில் அரசின் நியாய விலை கடை மூலமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள் பெற ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டை மிக முக்கிய ஆவணமாகும். அடையாள அட்டையாக பயன்படுத்தப்படுகிறது. ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது பெயரும் இடம்பெற்றிருக்கும். தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. மத்திய அரசு கோதுமை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் நாடு முழுவதும் வழங்கி வருகிறது.

Advertisment

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது. அரசின் திட்டங்களை செயல்படுத்த ரேஷன் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. அந்தவகையில் குடும்பத்தில் உள்ள அனைவரது பெயரும் ரேஷன் அட்டையில் இடம்பெறுவது கட்டாயம். திருமணமாகி பெண் வந்தாள், குழந்தை பிறந்தாள் அவர்களின் பெயரை கணவன் குடும்பத்தின் ரேஷன் அட்டையில் சேர்க்க வேண்டும். அந்தவகையில் புதிய குடும்ப உறுப்பினர் பெயரை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் இணைக்கலாம். இணைப்பதற்கு ஆதார் அட்டை, திருமண சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.

ஆன்லைனில் பெயர் சேர்ப்பு

மாநில அரசின் உணவு வழங்கல் மற்றும் விநியோகத் துறையின் (state food supply official website) அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

  1. இந்த பக்கத்தில் உங்களுக்கு என தனி லாக்கின் ஐடி உருவாக்க வேண்டும். ஏற்கனவே இருந்தால் அதை பதிவிடவும்.
  2. முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் adding a new member என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதைக் கொடுத்தப்பின் புதிய படிவம் திரையில் வரும். அதில் புதிய குடும்ப உறுப்பினரின் விவரங்களை பதிவிட வேண்டும்.
  4. அடுத்து, அங்கு கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும்.
  5. படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு ஒரு பதிவு எண் (registration number) அனுப்பபடும்.
  6. அந்த எண் கொண்டு உங்கள் விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ்ஸை தெரிந்து கொள்ளலாம்.
  7. படிவம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தப் பின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தபால் மூலமாக புதிய ரேஷன் அட்டை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். அது குறித்த தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
Ration Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment