How to add telegrams animated stickers tamil news : பிரபலமான செய்தியிடல் பயன்பாடான டெலிகிராம், ஏராளமான அம்சங்கள் நிறைந்தது. மேலும், அதன் சிறந்த மற்றும் எளிமையான அம்சங்களில் ஒன்று அதன் பெரிய ஸ்டிக்கர்களின் நூலகத்திலிருந்து தேர்ந்தெடுத்து அவற்றை உங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பும் திறன்தான். டெலிகிராமின் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் கோபமாகவோ, அன்பாகவோ அல்லது சிறுபிள்ளைத்தனமாகவோ நீங்கள் நினைப்பதை வேடிக்கையாகவும், வெளிப்படையாகவும் சொல்ல அனுமதிக்கின்றன. டெலிகிராமில் உள்ள பயன்பாட்டு ஸ்டிக்கர் சேகரிப்பு ஒருவர் வாட்ஸ்அப்பில் பெறுவதை விட பெரியது.
டெலிகிராம் அனிமேஷன் ஸ்டிக்கர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் அதற்குக் குறைந்தபட்ச வழிமுறைகளே உள்ளன. இருப்பினும், இந்தப் பயன்பாட்டின் ஏராளமான ஸ்டிக்கர்களின் முன்னிருப்பாக டெலிகிராம் ஸ்டிக்கர் ஸ்டோர்களில் கிடைக்கின்றன. மேலும் நீங்கள் பல முறை அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு முதலில் ஸ்டிக்கர்களை சேர்க்க வேண்டும். சில எளிய வழிமுறைகளில் அவற்றை எப்படி செய்வது என்பதை இங்கே காணலாம்.
டெலிகிராம் அனிமேஷன் ஸ்டிக்கர்களை எவ்வாறு சேர்ப்பது மற்றும் பயன்படுத்துவது
ஸ்டெப் 1: டெலிகிராம் சாட் விண்டோவிற்கு செல்லவும்
டெலிகிராமைத் திறந்து உங்கள் தொடர்பிலிருக்கும் சாட்டுக்குச் செல்லுங்கள்.
ஸ்டெப் 2: இமோஜி பட்டியைத் திறந்து ஸ்டிக்கர்கள் டேபிற்கு மாறவும்
சாட்டில் இமோஜி பட்டனை கிளிக் செய்யுங்கள். இது உங்கள் உரைச் செய்தியைத் தட்டச்சு செய்யும் பெட்டியின் இடதுபுறத்தில் இருக்கும். மேலும், இது ஸ்மைலி முகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இமோஜி பட்டி திறந்ததும், ஸ்டிக்கர்கள் டேபிற்குச் செல்ல ஸ்டிக்கர்கள் பட்டனை அழுத்தவும் அல்லது அங்கு செல்ல வலமிருந்து இடமாக இரண்டு முறை ஸ்வைப் செய்யவும்.
ஸ்டெப் 3: 'சேர்' பட்டனை கிளிக் செய்க
டெலிகிராம் ஸ்டிக்கர் ஸ்டோருக்கு செல்ல பேனலின் மேல் இடதுபுறத்தில் உள்ள பிளஸ் பட்டனை (+) கிளிக் செய்யுங்கள். பல்வேறு ஸ்டிக்கர் பேக்குகளுக்கு அடுத்துள்ள ‘சேர்’ என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் விரும்பும் ஸ்டிக்கர் பேக்குகளை இங்கே சேர்க்க முடியும்.
ஸ்டெப் 4: எப்போது வேண்டுமானாலும் டெலிகிராம் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்துங்கள்
நீங்கள் விரும்பும் ஸ்டிக்கர் பேக்குகளை சேர்த்தவுடன், ஸ்டிக்கர்கள் டேபிற்கு செல்ல 1 மற்றும் 2 வழிமுறைகளை மீண்டும் செய்யலாம். இங்கிருந்து, இப்போது உங்கள் ஸ்டிக்கர்களை க்ளிக் செய்வதன்மூலம் அனுப்பலாம். காலப்போக்கில், நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஸ்டிக்கர்கள் விரைவான அணுகலுக்காக பட்டியின் மேற்புறத்தில் காண்பிக்கப்படும்.
நீங்கள் எந்த சாட்டில் இருந்தாலும் அதே ஸ்டிக்கர்கள் தோன்றும். எனவே, ஒவ்வொரு தொடர்புக்கும் தனித்தனியாக ஸ்டிக்கர்களை சேர்க்க தேவையில்லை. மேலும் ஸ்டிக்கர் பேக்குகளை சேர்க்க ஸ்டிக்கர் ஸ்டோருக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.