பாரத் ஸ்டேட் வங்கி இந்தியாவின் பெரிய பொதுத் துறை வங்கியாகும். நாடு முழுவதும் ஏராளமான கிளைகளை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் எஸ்.பி.ஐ வங்கியில் ஏ.டி.எம் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
யார் ஏ.டி.எம் கார்டு பெற முடியும்?
1. எஸ்.பி.ஐ வங்கியில் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கு (current account) வைத்திருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரர் 21 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் கார்டு அப்ளை செய்வது எப்படி?
எஸ்.பி.ஐ நெட் பேங்கிங் வசதி மூலம் ஏ.டி.எம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
1. எஸ்.பி.ஐ நெட் பேங்கிங் லாக்கின் செய்ய வேண்டும். யூசர் நேம், பாஸ்வோர்ட், கேப்ட்சா கொடுத்து லாக்கின் செய்யவும்.
2. ‘e-Services’ ஆப்ஷன் செலக்ட் செய்யவும்.
3. அடுத்து ‘ATM card services’ ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
4. இப்போது புதிய பக்கம் ஓபன் ஆகும். இதில் ‘Request ATM/Debit card’ என்பதை கொடுக்கவும்.
5. ஓ.டி.பி பெற 2 ஆப்ஷனில் கேட்கப்படும் 1. profile password 2. போன் நம்பர் வழியாக ஓ.டி.பி பெறுவது.
6. போன் நம்பர் வழியாக ஓ.டி.பி என்ற ஆப்ஷன் செலக்ட் செய்த பிறகு பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பபடும்.
7. ஓ.டி.பி கொடுத்து submit பட்டன் கொடுக்கவும்.
8. இப்போது உங்கள் எஸ்.பி.ஐ கணக்குகள் காண்பிக்கப்படும். இதில் நீங்கள் எந்த அக்கவுண்ட்டிற்கு ஏ.டி.எம் கார்டு பெற வேண்டும் என்பதை செலக்ட் செய்யவும்.
9. அடுத்து பெயர், எந்த வகையான கார்டு வேண்டும் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
10. விவரங்களை மீண்டும் சரிபார்த்து submit ஆப்ஷன் கொடுக்கவும். அவ்வளவு தான் ஏ.டி.எம் கார்டுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. எப்போது பெற முடியும் உள்ளிட்ட தகவல்கள் உங்கள் மொபைல் போனிற்கு அனுப்பபடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“