/tamil-ie/media/media_files/uploads/2023/03/sbi2.jpg)
பாரத ஸ்டேட் வங்கியில் தனிநபர் கடன் பெறுவதற்கு ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். கடன் பெற தகுதி வாய்ந்த நபர்களுக்கு வங்கி கடன் வழங்கும். இதில் சில விதிமுறைகளையும் வங்கி கொண்டுள்ளது. அதன்படி, வயது 21 முதல் 58 வயது வரை உள்ளவர்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். ஒரு நிலையான வேலை மற்றும் முறையாக பணம் கட்டிய கடன் வரலாறு ஆகியவை கொண்டிருக்க வேண்டும்.
ஆன்லைனில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
1. எஸ்.பி.ஐ இணைய பக்கம் செல்லவும்
எஸ்.பி.ஐ வங்கியின் இணையப் பக்கம் செல்லவும். அதில் தனிநபர் கடன் என்ற செக்ஷனை கண்டறியவும் அல்லது "SBI தனிநபர் கடன்" என்று சர்ச் செய்யவும்.
2. கடன் விருப்பங்களை பார்வையிடவும்
விண்ணப்பிக்கும் முன், ஒரு சிறிய ஆராய்ச்சியை மேற்கொள்வது மற்றும் பல்வேறு கடன் விருப்பங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். வட்டி விகிதங்கள், கடன் தொகைகள், திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் செயலாக்கக் கட்டணம் போன்ற காரணிகளைக் கவனியுங்கள். அதன்பின் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற கடனைத் தேர்வு செய்யவும்.
3. விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
உங்களுக்குப் பொருத்தமான கடன் விருப்பத்தை நீங்கள் கண்டறிந்ததும், “Apply Now" or “Online Application" பட்டனை
கிளிக் செய்யவும். இப்போது ஆன்லைன் விண்ணப்ப படிவம் ஓபன் ஆகும். தனிப்பட்ட தகவல், வேலைவாய்ப்பு விவரங்கள், வருமான விவரங்கள் மற்றும் நீங்கள் பெற விரும்பும் கடன் தொகை உட்பட தேவையான அனைத்து விவரங்களையும் கவனமாக நிரப்பவும்.
4. ஆவணங்களை அப்லோடு செய்யவும்
விண்ணப்ப படிவத்துடன், விண்ணப்ப செயல்முறையை முடிக்க நீங்கள் சில ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
இந்த ஆவணங்களில் அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வருமானச் சான்று, வங்கி அறிக்கைகள் மற்றும் வங்கியால் குறிப்பிடப்பட்ட பிற ஆவணங்கள் இருக்கலாம். தேவையான வடிவத்தில் (பொதுவாக PDF அல்லது JPEG)
இந்த ஆவணங்களின் நகல்களை நீங்கள் ஸ்கேன் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
5. விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றிய பிறகு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் விவரங்களை கவனமாக மதிப்பாய்வு செய்யவும். ஏதேனும் பிழைகள் அல்லது தவறுகள் உள்ளதா என இருமுறை சரிபார்க்கவும். முழுவதையும் பூர்த்தி செய்த உடன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.