பான் கார்டு மிக முக்கிய ஆவணமாகும். குறிப்பாக வருமான வரி, வங்கி கணக்கு சேவை உள்ளிட்ட பணிகளுக்கு பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. 18 வயது நிறைவடைந்தவர்கள் பான் கார்டு பெறலாம். அந்த வகையில் ஆன்லைனில் இலவசமாக பான் கார்டு அப்ளை செய்வது குறித்து இங்கு பார்ப்போம். ஆதார் கார்டு வைத்து பான் கார்டு அப்ளை செய்ய முடியும்.
இலவசமாக பான் கார்டு அப்ளை செய்வது எப்படி?
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ e-Filing போர்டல் வழியாக அப்ளை செய்வது குறித்துப் பார்ப்போம்.
1. முதலில் e-Filing போர்டல் இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.
2. முகப்பு பக்கத்தில் உள்ள “Instant e-PAN.” ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
3. இ-பான் பக்கம் ஓபன் ஆனதும் 'Get New-e pan' கொடுக்கவும். அடுத்து உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை கொடுத்து Continue கொடுக்கவும்.
4. அடுத்து 'I have read the consent terms and agree to proceed further' என்பதை கிளிக் செய்து ஒப்புதல் அளித்து ஓ.டி.பி பக்கத்தில் Continue கொடுக்கவும்.
5. ஆதார் இணைக்கப்பட்ட எண்ணிற்கு ஓ.டி.பி அனுப்பப்படும். அதைகுறிப்பிட்டு செக் பாக்ஸ் செலக்ட் செய்து ஆதார் விவரங்களை கொடுத்து Continue கொடுக்கவும்.
6. அடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் கொடுத்த ஆதார் தகவல்களை சரிபார்த்து 'I Accept' என்பதை கொடுத்து மீண்டும் Continue கொடுக்கவும்.
7. அவ்வளவு தான் இப்போது உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட எண்ணிற்கு ஒப்புதல் மெசேஜ் அனுப்பபடும். அதோடு ட்ராக்கிங் எண் கொடுக்கப்படும் அதை வைத்து நீங்கள் உங்கள் பான் கார்டு ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ளலாம்.