ஆதார் கார்டு அடுத்து பான் கார்டு மிக முக்கிய அடையாள அட்டையாகும். குறிப்பாக நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு அவசியம். வருவான வரித் துறை சேவைகளுக்கு பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஆன்லைனில் பான் கார்டு எப்படி அப்ளை செய்வது என்று பார்ப்போம்.
விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்
1. வாக்காளர் அடையாள அட்டை
2. ஆதார் கார்டு
ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பம்
1. முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற வருமான வரித் துறை இணையதள பக்கம் செல்லவும்.
2. அப்ளிக்கேஷன் டைப் தேர்ந்தெடுக்கவும் .
3. category-யை தேர்ந்தெடுக்கவும் .
4. பெயர், பிறந்த தேதி, இ-மெயில் ஐ.டி, மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவிடவும்.
5. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு Agree செய்யவும்.
6. Captcha Code உள்ளிட்டு ‘Submit’ கொடுக்கவும் .
7. இப்போது புதிய பக்கத்திற்கு ரீ- டிரைக்ட் செய்யப்படும் அங்கு உங்களின் acknowledgement number கொடுக்கப்பபடும்.
8. இப்போது சில விவரங்கள் கேட்கப்படும். அதையும் பதிவிடவும்.
9. இப்போது தேவையான ஆவணங்கள் சமர்ப்பித்து ஆன்லைனில் சேவை கட்டணம் செலுத்தப்பட வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட நம்பர் வைத்து விண்ணப்ப ஸ்டேட்டஸ் நிலையை அறியலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“