எங்கெல்லாம் சென்றோம் என்பதை மனைவி சரியாக கண்டுபிடித்து விடுகிறாரா? – இதைப்பண்ணுங்க இனி யாராலும் கண்டுபிடிக்க முடியாது…

Google maps location history : கூகுள் மேப் ஆப் செட்டிங்கில் சில மாற்றங்களை செய்வதன் மூலம், லொகேசன் ஹிஸ்டரியில் ஒரு குறிப்பிட்ட கால அளவிலான பதிவுகளை மட்டும் சேமித்துவைத்துக்கொள்ள முடியும்.

By: Updated: December 9, 2019, 02:51:00 PM

மனிதனின் ஆறாவது புலனறுப்பாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது என்று கூறினால் அது யாரும் மறுப்பதற்கில்லை. அந்தளவுக்கு மனிதனின் ஒரு உறுப்பாகவே, ஸ்மார்ட்போன் உள்ளது.

ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் ஆப் எப்போதும் டிபால்டாகவே இருக்கும். இவர்கள் நடந்தாலும், வாகனங்களில் சென்றாலும், ஏன் விமானத்தில் ஒரு நாட்டில் இருந்து வேறொரு நாட்டுக்கு சென்றாலுமே, அவர்கள் சென்ற இடங்கள் குறித்த விபரங்கள், கூகுள் மேப்பில் பதிவாகி விடும். நாம் இதை மானுவலாக அழித்தால் ஒழிய அவைகள் நீங்காது. அப்படியே, கூகுள் சர்வரில் சேகரமாகி வரும்.

ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் மேப்ஸ் ஆப், நாம்போகும் இடத்தை எல்லாம் லொகேசன்களாக ஹிஸ்டரியில் சேமித்து வருகிறது. தேவைப்படும்போது அதனை நாம் பார்த்துக்கொள்ளவும் முடியும். இந்த ஆண்டு இந்த தேதியில் நாம் எங்கு சென்றோம் என்பதை கூகுள் மேப்பில் உள்ள லொகெசன் ஹிஸ்டரியை பார்த்து எப்போது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வசதி, பல கணவன்மார்களுக்கு பெரும்பாதகமாக அமைந்துவிடுகிறது. நாம் எந்த நேரத்தில் எங்கு சென்றோம் என்பதை கணவனுக்கு தெரியாமல், மனைவிமார்கள் பார்த்து விடுவதால், குடும்பத்தில் பலபிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.
கூகுள் மேப் ஆப் செட்டிங்கில் சில மாற்றங்களை செய்வதன் மூலம், லொகேசன் ஹிஸ்டரியில் ஒரு குறிப்பிட்ட கால அளவிலான பதிவுகளை மட்டும் சேமித்துவைத்துக்கொள்ள முடியும்.

கூகுள் மேப் லொகேசன் ஹிஸ்டரியை நீக்கும் முறை

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் அல்லது ஐபோனில் உள்ள கூகுள் மேப்பை திறந்து கொள்ளவும்
செயலியின் (app) இடதுஓரம் மேற்பக்கத்தில் உள்ள மெனு பாருக்கு செல்லவும்
அதில் டைம்லைனை தேர்வு செய்யவும்
திரையின் வலது பக்கத்திகல் உள்ள மூன்று புள்ளிகள் பகுதிக்கு செல்லவும்
அதில், செட்டிங்ஸ் அண்ட் பிரைவசி பகுதிக்கு செல்லவும்
Automatically delete location history என்பதை தெரிவு செய்யவும்
Keep until I delete manually என்பதில் இருந்து “Keep for 18 months” or “Keep for 3 months என்பதை தெரிவு செய்யவும்.

3 மாதங்களுக்கு ஒருமுறை லொகேசன் ஹிஸ்டரியை டெலிட் செய்வதே உத்தமம். 18 மாதங்கள் அல்லது டெலிட் செய்ய வேண்டாம் என்று குறிப்பிடுகையில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தான் அது அழியும். கூகுள் சர்வரில், நாம் பயணம் மேற்கொண்ட இடங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து சேகரமாகிக்கொண்டே இருக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:How to automatically delete google maps tracking locations

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X