Advertisment

போனில் தேவையற்ற அழைப்புகள் வருகிறதா? பிளாக் செய்ய எளிய வழிகள் இதோ!

ஐபோன், ஆண்ராய்டு போனில் தேவையற்ற அழைப்புகள் மற்றும் மற்றவர்களுடைய நம்பரை பிளாக் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
போனில் தேவையற்ற அழைப்புகள் வருகிறதா? பிளாக் செய்ய எளிய வழிகள் இதோ!

ஆண்ராய்டு போன், ஐபோன், டேப்லெட் என தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. செல்போன் நம்முடைய வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டது. எல்லாம் டிஜிட்டல் மயமாகிவருகிறது. நம்முடைய போனில் தினமும் பலவிதமான அழைப்புகளுக்கு பதில் சொல்கிறோம். பெற்றோர், உறவினர், நண்பர் தொடர்பு கொள்வர். அதுதவிர்த்து டெலிமார்க்கெட்டிங் அழைப்பு மற்றும் பிற தேவையற்ற அழைப்புகளை தினமும் எதிர்கொள்கிறோம்.

Advertisment

அந்தவகையில் உங்களுக்கு விருப்பம் இல்லாத தனிநபர் அல்லது மற்ற அழைப்புகளை தவிர்க்க விரும்பினால், அந்த குறிப்பிட்ட எண்ணில் இருந்து மீண்டும் அழைப்பு வராதபடி பிளாக் செய்யும் வசதி ஐபோன், ஆண்ராய்டு போனில் உள்ளது.

ஐபோனில் நம்பர் பிளாக் செய்வது எப்படி?

  1. முதலில் செட்டிங்ஸில் போன் மெனுவிற்கு செல்ல வேண்டும்.
  2. Blocked Contacts பகுதியை கிளிக் செய்து உள்ளே போக வேண்டும்.
  3. “Add New” ஆப்ஷன் கொடுத்து, பிளாக் செய்ய வேண்டிய நம்பரை contacts-இல் இருந்து நேரடியாக செலக்ட் செய்து பிளாக் செய்யலாம்.

ஐபோனில் unblock செய்வது எப்படி?

  1. அதேபோல் செட்டிங்ஸ், போன் மெனுவிற்கு சென்று, Blocked Contacts பகுதிக்குள் செல்ல வேண்டும்.
  2. வலதுபுறத்தில் உள்ள எடிட் மெனு கொடுக்க வேண்டும்.
  3. அங்கு நீங்கள் யாருடைய நம்பரை unblock செய்ய வேண்டுமே அவருடைய நம்பர் பின் இருக்கும் '- ' ஐகானை நீக்க வேண்டும்.
  4. ஓகே எனக் கொடுத்து unblock செய்து விடலாம்.

ஆண்ராய்டு போனில் பிளாக் செய்வது எப்படி?

  1. Contacts போன் மெனுவிற்கு செல்ல வேண்டும்.
  2. அதில், செட்டிங்ஸ் கொடுத்து கால் பிளாக்கிங் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்குள் செல்ல வேண்டும்.
  3. அதில் பிளாக் நம்பர் என்பதை கிளிக் செய்து, வலதுபுறத்தில் உள்ள '+' ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
  4. நம்பர் பதிவிட்டு பிளாக் செய்யலாம். அல்லது, call history or contacts-இல் இருந்து நேரடியாக நம்பரை செலக்ட் செய்து பிளாக் செய்யலாம்.

ஆண்ராய்டு போனில் நம்பர் unblock செய்வது எப்படி?

  1. Contacts போன் மெனுவிற்கு செல்ல வேண்டும்.
  2. அதில், செட்டிங்ஸ் கொடுத்து கால் பிளாக்கிங் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்குள் செல்ல வேண்டும்
  3. இப்போது Blocked Contacts எனக் கொடுக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் சென்று, யாருடைய நம்பரை unblock செய்ய வேண்டுமே அவருடைய நம்பர் பின் இருக்கும் 'X' ஐகானை நீக்க வேண்டும்.

செல்போன் மாடலுக்கு ஏற்ப சில வசதிகள் மாறுபடும். இருப்பினும், பெரும்பாலும் இதே வழிமுறைகள் தான் கொடுக்கப்பட்டிருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Android Iphone Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment