இந்த டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட் போன்கள் அத்தியாவசியமாகி விட்டது. காய்கறி வாங்குவது முதல் விமானக் கட்டணம் வரை அனைத்திற்கும் மொபைல் போன் தான். அதே சமயம் இதில் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்த செயலிகள் (ஆப்ஸ்) உள்ளன. இந்த ஆப்களைப் பயன்படுத்தும் போது கேமரா, லொக்கேஷன் மற்றும் மைக் போன்றவற்றிற்கான ஆக்சஸ் கேட்கும். இதை நாம் செய்யும் போது நமது கேமரா, லொக்கேஷன் மற்றும் மைக் போன்றவற்றை இந்த ஆப்கள் டிராக் செய்யும். இதில் பாதுகாப்பாக இருப்பது குறித்து பார்ப்போம்.
Allow only while using the app, Ask every time, Don't allow என்ற 3 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதை ஆப்ஷன்களை நாம் பின்பு மாற்றியமைத்து ஆப்கான அணுகலை வழங்கலாம்.
ஆப் அணுகலைகளை மாற்றுவது எப்படி?
– உங்கள் ஆண்ட்ராய்டு போனில் செட்டிங்ஸ் அப்ளிகேஷனைத் திறக்கவும்.
- பயன்பாடுகளுக்குச் சென்று, நீங்கள் அனுமதிகளை மாற்ற விரும்பும் பயன்பாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
– பின்னர், அனுமதிகள் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- கேமரா, தொடர்புகள், லொக்கேஷன் மற்றும் மைக்ரோஃபோன் உள்ளிட்ட அனுமதி வகைகளின் பட்டியலைக் காண்பீர்கள்.
- நீங்கள் நிர்வகிக்க விரும்பும் அனுமதியை இப்போது மாற்றியமைக்கலாம், நீங்கள் பல விருப்பங்களைக் காண்பீர்கள்
– இப்போது “Allow while using the app,” “Don’t allow” மற்றும் “Ask Every Time for the specific app.” என்ற ஆப்ஷன்களில் நீங்கள் இப்போது உங்கள் விருப்பதை தேர்ந்தெடுத்து மாற்றலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“