எல்லாம் நவீன மயமாகிவரும் நிலையில், ஸ்மாட்போன் ஒன்று இருந்தால் போதும் அனைத்தும் இருந்த இடத்திலேயே செய்துவிடலாம் என்று காலம் மாறிவிட்டது. சிறிய கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை ஆன்லைன் பேமண்ட் முறைக்கு மாறிவிட்டன. இதற்கு உதவியாக GPay(ஜிபே), PhonePe (போன் பே) ,Paytm (பே டிஎம்) பணப் பரிவர்த்தனை செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் எளிய முறையில் பரிவர்த்தனை செய்ய முடிவதால் ஏரளமானோர் இதை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக உங்கள் ஸ்மாட்போன் தொலைந்துவிட்டால், சிம் பிளாக் செய்யப்படுவது போன்று, ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செயலிகள் GPay,PhonePe,Paytm கணக்குகளை பிளாக் செய்வதும் முக்கியம். எவ்வாறு பிளாக் செய்து என்று பார்க்கலாம்.
Paytm கணக்கை பிளாக் செய்யும் முறை
- முதலில் Paytm Payments Bank உதவி எண் 01204456456 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும்.
- அதில் தொலைந்துபோன தொலைபேசி என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து மாற்று தொலைபேசி எண் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, தொலைந்து போன தொலைபேசி எண்ணை பதிவிடவும்.
- தகவல்களை கொடுத்த பிறகு, ஸ்மார்ட்போனில் இருந்து வெளியேறும் ஆப்ஷனை கொடுத்து வெளியேற வேண்டும்.
- இதனை செய்தவுடன் Paytm இணையதளத்திற்கு சென்று 24x7 உதவியைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதில் Report a Fraud என்பதைத் தேர்ந்தெடுத்து Issues ஆப்ஷனில் உங்கள் புகாரை பதிவிட வேண்டும்.
- பின், உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள். Paytm உங்கள் கணக்கை சரிபார்த்து தற்காலிகமாக கணக்கை பிளாக் செய்யும்.
Google Pay கணக்கை பிளாக் செய்வது எப்படி?
கூகுள் பே உதவி மைய எண் 18004190157 எண்ணிற்கு தொடர்பு கொண்டு, சேவை மைய அதிகாரியிடம் உங்கள் புகார், தகவல்களை கூறி கூகுள் பே அக்கவுண்டை பிளாக் செய்து கொள்ளலாம்.
PhonePe கணக்குகளை பிளாக் செய்யும் முறை
- 08068727374 அல்லது 02268727374 என்ற எண்ணில் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். கேட்கப்படும் தகவல்களை பதிவிட வேண்டும்.
- சிம் மற்றும் மொபைல் தொலைந்துவிட்டது என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். பின், வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி உங்களை தொடர்பு கொண்டு புகார் பெற்று, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கடைசியாக பணம் செலுத்திய தகவல் மற்றும் பரிவர்த்தனை மதிப்பு போன்ற விவரங்களைக் கேட்டு உங்கள் PhonePe கணக்கை பிளாக் செய்ய உதவுவார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.