ஓயாத இம்சை அழைப்புகள்: உங்கள் மொபைலில் எண்களை ‘ப்ளாக்’ செய்வது எப்படி?

How to block mobile number in smartphones கேலக்ஸி தொலைபேசிகளில், மொபைல் எண்ணைத் தடுக்கும் நடைமுறை சற்று வித்தியாசமானது.

How to block mobile number in Iphone Android Smartphones Tamil News
How to block mobile number in Iphone Android Smartphones

How to block mobile number Tamil News : பல ஆண்டுகளாக, ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்துள்ளன. காப்பீட்டு டெலிமார்க்கெட்டர்கள் மற்றும் தொலைதொடர்பு ஆபரேட்டர்களிடமிருந்து இந்த தேவையற்ற ஆட்டோ-டயல் ஸ்பேம் அழைப்புகள் பெரும் தொல்லையாகவே இருக்கின்றன. மோசடி அழைப்புகளை முற்றிலுமாக அகற்ற எந்த வழியும் இல்லை என்றாலும், மொபைல் எண்ணை ஸ்பேம் என்று நீங்கள் அடையாளம் கண்டால், நீங்கள் எப்போதும் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அந்த எண்களைத் தடுக்கலாம். எரிச்சலூட்டும் ரோபோகால்களை நிறுத்த விரும்பினாலும் அல்லது நீங்கள் விரும்பாத ஒரு நபரின் எண்ணைத் தடுக்க விரும்பினாலும், போலி மற்றும் ஸ்பேம் அழைப்புகளைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை இனி பார்க்கலாம்.

ஐபோனில் அழைப்பைத் தடுப்பது எப்படி?

ஐபோனில் தொலைபேசி எண்ணைத் தடுப்பதை ஆப்பிள் எளிதாக்கியுள்ளது. ஒரு எண்ணைத் தடுக்க, நீங்கள் iOS 13 இயங்கும் ஐபோனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், தொலைபேசி பயன்பாட்டைத் திறந்து சமீபத்திய அழைப்புகளை க்ளிக் செய்யவும். பிறகு நீங்கள் தடுக்க விரும்பும் எண்ணைக் கண்டறிந்து, ஒரு வட்டத்தில் “i” என்ற சிறிய எழுத்தைக் கொண்ட ஐகானை க்ளிக் செய்யவும். கீழே ஸ்க்ரோல் செய்து, ‘இந்த அழைப்பாளரைத் தடு’ என்பதை க்ளிக் செய்யவும்.

இதேபோல், தொடர்பிலிருக்கும் message thread-ஐ தேர்ந்தெடுத்து, மேல் வலது மூலையில் உள்ள நீல நிற “i” ஐகானை க்ளிக் செய்வதன் மூலம் செய்திகளிலிருந்து ஒரு எண்ணைத் தடுக்கலாம்.

ஃபேஸ்டைம் வழியாக யாராவது உங்களைப் பின்தொடரலாம் என்று நீங்கள் நினைத்தால், அந்த நபரை நீங்கள் அறிந்திருந்தால், தெரிந்த அழைப்பாளருடன் நீங்கள் கடைசியாகப் பேசிய உரையாடலைக் கண்டுபிடித்து தகவல் ஐகானைக் க்ளிக் செய்யுங்கள். அழைப்பு பற்றிய தகவலுடன் ஒரு திரை தோன்றும். பிறகு சிறிது கீழே ஸ்க்ரோல் செய்து ‘இந்த அழைப்பாளரைத் தடு’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

How to block mobile number in Iphone Android Smartphones Samsung Tamil news
How to block mobile number in Iphone Android Smartphones

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அழைப்பைத் தடுப்பது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அழைப்பு / எண்ணைத் தடுக்க தனி பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டியதில்லை. அழைப்பைத் தடுக்க இங்கு குறிப்பிட்டுள்ள வழிமுறைகள், நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டின் கைபேசி மற்றும் பதிப்பைப் பொறுத்தது. ஆனால், பெரும்பாலும் இந்த செயல்முறை எளிதானதுதான்.

1.) தொலைபேசி பயன்பாட்டைத் திறந்து, ‘வரலாறு’ டேபை க்ளிக் செய்யவும்.

2.) நீங்கள் தடுக்க விரும்பும் மொபைல் எண்ணுக்கு அடுத்த மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும்.

3.) ‘எண்ணைத் தடுக்கவும்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

How to block mobile number in Iphone Android Smartphones Samsung Tamil news
All Android phones have a native number blocking feature

சாம்சங் தொலைபேசியில் எண்ணைத் தடுப்பது எப்படி?

இந்தியாவில் பிரபலமான பிராண்டாக சாம்சங் இருப்பதால், நிறையப் பேர் கேலக்ஸி தொலைபேசியை வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான கேலக்ஸி தொலைபேசிகள் சாம்சங்கின் சொந்த ஆண்ட்ராய்டு பதிப்பை இயக்குகிறது. இதில், மொபைல் எண்ணைத் தடுக்கும் நடைமுறை சற்று வித்தியாசமானது.

1.) தொலைபேசி பயன்பாட்டைத் திறந்து, திரையின் அடிப்பகுதியில் உள்ள “சமீபத்திய நிகழ்வு (Recents)” க்ளிக் செய்யவும்.

2.) நீங்கள் தடுக்க விரும்பும் தொலைபேசி எண்ணை க்ளிக் செய்யவும். பின்னர் “i”-ஐ க்ளிக் செய்யவேண்டும்.

3) கீழ் பட்டியில் உள்ள ‘தடுப்பு’ ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to block mobile number in iphone android smartphones samsung blocking numbers tamil news

Next Story
இதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்Airtel Jio Vodafone Idea Prepaid Plans under Rs 100 Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express