இந்தியாவில் ஆதார் மிக முக்கிய அடையாள அட்டையாகும். வங்கிப் பணப் பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை அனைத்திற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் அவசியம் ஆகும். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் அப்டேட் செய்யப்பட வேண்டும். இந்நிலையில் புதிதாக ஆதார் அப்ளை செய்பவர்கள் அல்லது ஆதார் சேவையில் சந்தேகம் இருந்தால் பொது மக்கள் mAadhaar ஆப் மூலம் ஆதார் சேவா கேந்திராவை தொடர்பு கொள்ளலாம். அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்து தொடர்பு கொண்டு பேசலாம்.
1. மத்திய அரசின் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
2. Get Aadhaar கொடுத்து அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்யவும்.
3. உங்கள் லொக்கேஷனை கொடுக்கவும்.
4. ஆதார் தொடர்பான விவரங்களை கொடுக்கவும். பின் மொபைல் எண், கேப்ட்சா கொடுத்து ஓ.டி.பி பதிவிடவும்.
5. அப்பாயிண்ட்மெண்ட் விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் கொடுத்து தொடர்பு கொள்வதற்கான நேரத்தை செலக்ட் செய்து அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“