scorecardresearch

சென்னை- கோவை வந்தே பாரத்: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

சென்னை- கோவை மற்றும் கோவை- சென்னை இடையே 14-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 8-ம் தேதி தொடங்கப்பட்டது,

vande bharat
Vande-Bharat Express

இந்தியாவின் 14-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே கடந்த 8-ம் தேதி தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரம் 5 மணி நேரம் 50 நிமிடங்களாக குறைந்துள்ளது. அதாவது சென்னையில் இருந்து கோவைக்கு 497 கி.மீ தூரத்தை 5.50 நிமிடங்களில் சென்றடைய முடிகிறது.

இரண்டு நகரங்களுக்கு இடையேயான பயணத்தின் போது, ​​சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் சேவை வழங்கப்படுகிறது. சென்னை- கோயம்புத்தூருக்கு செல்லும் போது
20643 என்ற வண்டி எண்ணும், கோயம்புத்தூர்- சென்னை செல்லும் போது 20644 என்ற வண்டி எண்ணும் கொண்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி செயலி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.25க்கு புறப்படும் ரயில் கோவைக்கு இரவு 8.15 மணியளவில் வந்தடைகிறது. அதே போல் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் சென்னைக்கு மதியம் 11.50 மணியளவில் வந்தடைகிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் எளிது. இதற்கு தனியாக செயலி எதுவும் தேவையில்லை. வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலமாகவே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டும் முன்பதிவு செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: How to book chennai coimbatore vande bharat express tickets