வாட்ஸ்அப் மூலம் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து இங்கு பார்ப்போம். பயனர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிர்வாகம் இந்த வசதியை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. வாட்ஸ்அப் சாட்போட் ( WhatsApp chatbot) மூலம் இந்த சேவையை வழங்குகிறது. சாட்போட் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் வழங்கப்படுகிறது. இருப்பினும், இதில் சில வரம்புகள் உள்ளன. இதில் முன்பதிவு செய்வதன் மூலம் டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது.
வாட்ஸ்அப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு
1. வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்து +91 83000 86000 என்ற எண்ணுக்கு “ஹாய்” என்று மெசேஜ் அனுப்பவும். அல்லது நேரடியாக மெட்ரோ நிலையம் சென்று அங்குள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.
2. இப்போது உங்களது விருப்பமான மொழியை தேர்ந்தெடுக்கவும்.
3. அடுத்து ‘book your ticket’ ஆப்ஷன் கொடுக்கவும், இதில் quick booking என்ற மற்றொரு ஆப்ஷன் இருக்கும். நீங்கள் ஏற்கனவே இதைப் பயன்படுத்தி உங்களுடைய favourite routes கொடுத்திருந்தால் இதன் மூலம் உடனடியாக புக் செய்யலாம்.
4. அடுத்து நீங்கள் இருக்கும் இடம் மற்றும் செல்ல வேண்டிய மெட்ரோ நிலையத்தை செலக்ட் செய்யவும்.
5. இப்போது எத்தனை டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடவும். தற்போது வரை வாட்ஸ்அப் மூலம் 6 டிக்கெட்கள் முன்பதிவு செய்யலாம்.
6. அடுத்தாக Confirm கொடுத்து proceed to pay கொடுக்கவும்.
7. யு.பி.ஐ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் டிஜிட்டல் வாலட்கள் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
8. கட்டணம் செலுத்தியவுடன் பயணத்திற்கான QR டிக்கெட் வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“