/tamil-ie/media/media_files/uploads/2019/01/amazon-prime-day.jpg)
அமேசான் ஷாப்பிங், வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மட்டுமல்ல அதில் பணப் பரிவர்த்தனைகள், ஏன் பேருந்து, ரயில், விமான பயணங்களுக்கான டிக்கெட்களை கூட முன்பதிவு செய்யலாம். இங்கு அமேசான் தளத்தில் எளிதாக விமான டிக்கெட்கள் முன்பதிவு செய்வது குறித்துப் பார்ப்போம்.
அமேசானில் விமான டிக்கெட் குறித்துப் பார்ப்போம் எப்படி?
1. முதலில் அமேசான் ஷாப்பிங் ஆப் ஓபன் செய்யவும். அதில் மேலே உள்ள பேனலில் Travel ஆப்ஷன் செலக்ட் செய்யவும்.
2. அதில் இப்போது mode of travel அதாவது, ரயில் பயணமா, விமானமா என்பதை தேர்ந்தெடுக்கவும். விமானம் என்பதை செலக்ட் செய்யுங்கள்.
3. அடுத்து, எங்கிருந்து செல்கிறீர்கள் எந்த விமான நிலையம் செல்ல வேண்டும் என்பதை குறிப்பிடவும்.
4. இப்போது பயணம் தேதியை உள்ளிடவும்.
5. அடுத்து பயண விவரம் அதாவது எத்தனை டிக்கெட்கள் முன்பதிவு செய்யப் போகிறீர்கள், உங்களுடைய பெயர், பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்.
6. இதை கொடுத்தப் பின் Proceed to pay கொடுத்து கட்டணத்தை செலுத்தலாம். இதன் பின் உங்களுடைய டிக்கெட் புக் செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.