கேஸ் சிலின்டர் ‘புக்’ செய்வது சுலபம்: இந்த வசதியை கவனித்தீர்களா?

ஹெச்பி கேஸ் சந்தாதாரராக இல்லாதவர்கள், அமேசானைப் பயன்படுத்தி எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்க.

By: November 6, 2020, 7:56:41 AM

How to Book Gas Cylinders through Alexa Tamil News: பயனர்கள், எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது அமேசான். ஆம், நீங்கள் இப்போது தானியங்கி ‘வாய்ஸ் ரெஸ்பான்ஸ்’ அமைப்பு மூலம் எல்பிஜி ரீஃபில்களை முன்பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம். பணத்தை நேரடியாகச் செலுத்தினால் போதுமானது.

அமேசான் இந்தியா இப்போது அதன் வலைத்தளத்தில் இந்த அம்சங்களை வெளியிட்டுள்ளது. மேலும், அலெக்ஸாவின் உதவியுடன் ஹெச்பி எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிஜிட்டல் அசிஸ்டன்ட் தன் பணியைச் செய்து முடிக்க சில வினாடிகள் மட்டுமே தேவைப்படும்.

அலெக்ஸாவைப் பயன்படுத்தி எரிவாயு சிலிண்டரை எப்படி முன்பதிவு செய்வது:

முதலில் அமேசான் கட்டண டாபின் (tab) கீழ் உள்ள ‘எல்பிஜி’ வகையையோ அல்லது ஹோம்பேஜ்ஜில் உள்ள “கட்டணம் செலுத்த” ஆப்ஷனையோ தேர்ந்தெடுக்கவேண்டும். இங்கு, ஹெச்பி கேஸ் மொபைல் எண் அல்லது 17 இலக்க எல்பிஜி ஐடியை அமேசான் கணக்கில் பதிவு செய்யுங்கள்.

இது முடிந்ததும், எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய அலெக்ஸாவிடம் கேட்கலாம். உங்களிடம் இயக்கப்பட்ட அலெக்ஸா சாதனம் இருந்தால், “அலெக்ஸா, எனது ஹெச்பி கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்” என்று சொன்னால் போதுமானது. கட்டணத்தைச் செயலாக்குவதற்கு முன்பு வாடிக்கையாளர் உறுதிப்படுத்தலை அலெக்ஸா கேட்கும்.

இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்குக் கட்டணத்தை உறுதிப்படுத்தும் எஸ்எம்எஸ் வரும். மேலும், வினியோகஸ்தர் விவரங்களை Amazon.in-ல் பயனர்கள் காண முடியும். “Amazon Pay வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் பரிவர்த்தனையை 30 வினாடிகளுக்குள் மூன்று வாய்ஸ் கட்டளைகளுடன் அலெக்ஸாவோடு முடிக்க முடியும்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெச்பி கேஸ் சந்தாதாரராக இல்லாதவர்கள், அமேசானைப் பயன்படுத்தி எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்க. இந்த விர்ச்சுவல் அசிஸ்டென்ட், வங்கி கணக்கிலிருந்து தேவையான தொகையைக் கழிப்பதன் மூலம் அதன் பணியை முடிக்கும்.

யுபிஐ, கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மற்றும் நெட்-பேங்கிங் உள்ளிட்ட பல டிஜிட்டல் பயன்முறையையும் பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கான வாய்ப்பை அமேசான் வழங்குகிறது. பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைக்குக் கட்டண செயல்முறையில் end-to-end என்க்ரிப்ஷன் செய்யப்படும் என்றும் அமேசான் கூறுகிறது. Amazon Pay மூலம் பணம் செலுத்திய பின்னர் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 கேஷ்பேக் கிடைக்கும்.

“எங்கள் வாடிக்கையாளர்களுக்கான எங்களுடைய உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, பல்வேறு வகையான செயலிகளில் டிஜிட்டல் பேமென்ட்டுகளை தடையின்றி செய்ய நாங்கள் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறோம். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் எல்பிஜி சிலிண்டருக்கு நேரடியாகப் பணம் செலுத்த விரும்புகிறார்கள். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உடனான எங்கள் கூட்டணி, சமையல் எரிவாயுவிற்கான முன்பதிவு மற்றும் கட்டண அனுபவத்தை எளிதாக்கும் மற்றும் மில்லியன் கணக்கான நுகர்வோருக்குப் பயனளிக்கும் ”என்று அமேசான் பே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேந்திர நேருர்கர் கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:How to book gas cylinders using alexa tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X