இந்திய தொலைத் தொடர்பு துறையில் 3 முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் உள்ளன. அதில் ரிலையன்ஸ் ஜியோ ஏராளமான பயனர்களுடன் முன்னணி நிறுவனமாக உள்ளது. ஜியோ ரயில் ஆப்பானது, ஜியோ பயனர்களுக்கு பல வசதிகளுடன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான
சேவையை வழங்குகிறது.
யார் இந்த ஆப் பயன்படுத்த முடியும்?
ஜியோ ரயில் செயலி ஜியோ நெட்வொர்க் பயனர்கள் மட்டும் பயன்படுத்த முடியும். மற்ற தொலைத்தொடர்பு சேவை பயனர்கள் இந்தச் சேவையைப் பெற முடியாது.
ஜியோ ரயில் ஆப் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு எப்படி?
1. முதலில் ப்ளே ஸ்டோர் சென்று ஜியோ ரயில் ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும்.
2. அதன் பின் ஜியோ மொபைல் நம்பர் என்டர் செய்து ஓ.டி.பி உள்ளிடவும்.
3. அக்கவுண்ட் ஓபன் செய்த பின் புறப்படும் இடம், செல்லும் இடம் குறிப்பிட வேண்டும்.
4. இதன் பின் நீங்கள் செல்ல வேண்டிய ரயில் மற்றும் இடத்தை செலக்ட் செய்ய வேண்டும்.
5. அடுத்து கட்டணம் செலுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“