/indian-express-tamil/media/media_files/G4WaC6WEdi9ZUqyVUwuD.jpg)
யூ.டி.எஸ் செயலி சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பெரும் உதவியாக உள்ளது.
Indian Railways | UTS app | அனைத்திந்திய முன்பதிவு செய்யப்படாத மொபைல் டிக்கெட் வசதி, மொபைலில் உள்ள யுடிஎஸ், ரயில் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் சிரமத்தைத் தவிர்த்து, ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயனர்களை அனுமதிக்கிறது.
யுடிஎஸ் பயன்பாட்டைப் பயன்படுத்தி பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இது மட்டுமின்றி லோக்கல் ரயில்களிலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.
யூ.டி.எஸ் செயலியை உபயோகிப்பது எப்படி?
- யூ.டி.எஸ் செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
- கணக்கை லாக் இன் செய்யவும்.
- ப்ளாட்ஃபார்ம் புக்கிங் என்ற மெயின் மெனுவுக்கு செல்லவும்.
- பேப்பர் லெஸ் பார்மட்டை கிளிக் செய்யவும்.
- எத்தனை பயணிகள் என்பதை அளிக்கவும்.
- ஆன்லைனில் பணத்தை செலுத்தவும்.
- உங்கள் பயணச் சீட்டு (டிக்கெட்) ஸ்கீரினில் டிஸ்ப்ளே ஆகும்.
இந்த வசதி சென்னை போன்ற நகரங்களில் உள்ளூர் ரயிலை பயன்படுத்தும் பயணிகளுக்கு மிகவும் வசதியானதாக இருக்கும்.
ஏனெனில் அவர்கள் அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் நேரத்தில் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டரில் உள்ள நீண்ட வரிசை அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.