How to borrow upto 5gb of free data from Reliance Jio pay later scheme Tamil News : ரிலையன்ஸ் ஜியோ பயனர்களிடம் டேட்டா தீர்ந்துவிட்டால், உடனடியாக ரீசார்ஜ் செய்ய முடியாதபோது சில கூடுதல் டேட்டாவை (கூடுதல் செலவு இல்லாமல்) கடன் வாங்க அனுமதிக்கிறது. நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி அவசரகால டேட்டா லோன் பேக்குகளை வழங்குகிறது. இது நிறுவனத்தின் MyJio செயலியில் தெரியும். டேட்டாவைச் செயல்படுத்த, ஹாம்பர்கர் மெனுவை க்ளிக் செய்து, “அவசர டேட்டா கடன்” டேபிற்கு செல்ல வேண்டும்.
அவசரக்கால டேட்டா கடன் வசதி அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தினசரி டேட்டா கோட்டா முடிந்து, உடனடியாக ரீசார்ஜ் செய்ய, ‘இப்போது ரீசார்ஜ் செய்து பின்னர் பணம் செலுத்துங்கள்’ செயல்பாடுகளின் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. அதாவது, டேட்டா தீர்ந்த பிறகு உங்களால் பணம் செலுத்த முடியவில்லை என்றால், நீங்கள் உடனடியாக அதைக் கடனாகப் பெற்று பின்னர் செலுத்தலாம்.
டேட்டா லோன் தொகையை செலுத்துவதற்கான காலக்கெடு எதுவும் இல்லை என்றும், ஜியோ
ஒரு நேரத்தில், நீங்கள் 1ஜிபி டேட்டாவை மட்டுமே கடன் வாங்க முடியும். மேலும், 5ஜிபி வரை டேட்டாவை பெற நீங்கள் விரும்பினால், அவசரகால டேட்டா லோன் வசதியை நான்கு முறை செயல்படுத்துவதன் மூலம் அதைப் பெறலாம். ஒரு வாடிக்கையாளர் 5 ஜிபி டேட்டாவை எடுத்துக் கொண்டால், மொத்த டேட்டா கடன் தொகை ரூ.55 ஆக இருக்கும்.
5ஜிபி டேட்டா போதுமானதை விட அதிகமாக இருக்க வேண்டும் மற்றும் சில காரணங்களால் உடனடியாக பணம் செலுத்த முடியாதவர்களுக்கு நிவாரணம் அளிக்கும். ஆரம்பக் கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து 5ஜிபி வரை டேட்டாவை எப்படிக் கடனாகப் பெறலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
ஸ்டெப் 1: உங்கள் ஸ்மார்ட்போனில் MyJio பயன்பாட்டைத் திறந்து, அந்தப் பக்கத்தின் மேல் இடதுபுறத்தில் உள்ள ‘மெனு’ என்பதை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: மொபைல் சேவைகளின் கீழ் ‘அவசர டேட்டா கடன்’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: ‘அவசர தரவைப் பெறு’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: அவசர கடன் பலனைப் பெற ‘இப்போதே செயல்படுத்து’ என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: அவசர டேட்டா கடன் பலன் இப்போது செயல்படுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil