ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோபுக் 4ஜி (JioBook 4G) லேப்டாப் அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் லேர்னிங் புக் (First Learning Book) என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த லேப்டாப், (இன்று) ஆகஸ்ட் 5 முதல் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டலின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ரூ.16,499 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஜியோபுக் 4ஜி பெறுவதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. ஜியோபுக் 11 மாடல் 4ஜி லேப்டாப் ஆகும். Amazon Great Freedom Festival விற்பனையின் கீழ், கிரெடிட் கார்டு அல்லது EMI மூலம் கூடுதல் சலுகைகளைப் பெறலாம்.
சிறப்பம்சங்கள்
ஜியோபுக் 4ஜி கிளவுட் ஸ்டோரேஜ், இன்பில்ட் சிம் கார்டு மற்றும் பல அம்சங்களை வழங்குகிறது. ஜியோபுக் 11 4ஜி லேப்டாப் 4ஜி எல்.டி.இ நெட்வொர்க் ஆதரவுடன் டூயல் பேண்ட் வைஃபை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஜியோஓஎஸ் இயங்குதளத்துடன் மீடியாடெக் எம்.டி 8788 ஆக்டா கோர் செயலியைப் பெறுகிறது. ஜியோபுக் இன்பில்ட் 4ஜி சிம் கார்டு உள்ளது.
ஜியோபுக் 11 ஆனது 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, microSD கார்டு மூலம் 256ஜிபி விரிவுபடுத்திக் கொள்ளலாம். 4GB LPDDR4 ரேம் மென்மையான பயனர் இன்டர்பேஸ் மற்றும் செயல்திறனை உறுதி செய்கிறது.
இந்த லேப்டாப் 11.6 இன்ச் HD டிஸ்ப்ளே பெறுகிறது. 5,000mAh பேட்டரியுடன் 8 மணி நேரம் பயன்படுத்த முடியும். இந்த லேப்டாப் வாங்கும் பொழுது ஜியோ ஆப் சேவைகளைப் பெறலாம். JioBIAN மூலம் Pearl, Java மற்றும் Pearl போன்ற கோடிங் மொழிகள் கற்றுக்கொள்ளலாம்.
அதோடு டிஜிபாக்ஸ் உடன் 100ஜிபி கிளவுட் ஸ்டோரேஜை கூடுதல் கட்டணமின்றி வாங்கலாம். Quick Heal Antivirus பாதுகாப்பு 1 வருட சந்தாவுடன் வழங்கப்படுகிறது.
ஜியோபுக் புளூடூத் 5, 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் எச்டிஎம்ஐ மினி போர்ட் ஆகியவற்றை வழங்குகிறது. மாடலின் எடை வெறும் 990 கிராம், இது முந்தைய பதிப்பை விட கணிசமாக இலகுவானது. லேப்டாப் ஒரே நிறத்தில் ப்ளூ நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எப்படி வாங்குவது?
அமேசான் கிரேட் ஃ ப்ரிடம் சேல் விற்பனை, ரிலையன்ஸ் டிஜிட்டல் வெப்சைட்டில் ப்ரீ ஆர்டர் செய்து ஜியோபுக் வாங்கலாம். அமேசான் தளத்தில் கிரெடிட், இ.எம்.ஐ மூலம் சலுகை விலையில் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“